டபிள்யூடிஏ பைனல்ஸ் தொடர்; ஸ்பெயினின் முகுருசா சாம்பியன்.! அனெட்டை வீழ்த்தி அசத்தல்

குவாடலஜரா: டாப் 8 வீராங்கனைகள் பங்கேற்ற டபிள்யூடிஏ பைனல்ஸ் டென்னிஸ் தொடர் மெக்சிகோவில் நடந்து வந்தது. 2 பிரிவாக பிரிக்கப்பட்டு போட்டி நடந்தது. லீக் சுற்று முடிவில் அரையிறுதியில் எஸ்தோனியாவின் அனெட் கோன்டாவெயிட், கிரீசின் மரியா சக்கரியையும், ஸ்பெயினின் முகுருசா, சகநாட்டைச் சேர்ந்த படோசாவையும் வீழ்த்தினர்.

இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடந்த பைனலில் முகுருசா-அனெட் மோதினர். இதில் 6-3, 7-5 என்ற செட் கணக்கில் முகுருசா வெற்றி பெற்றார். அவருக்கு பரிசு கோப்பையுடன் ரூ.9.20 கோடி பரிசுத்தொகை வழங்கப்பட்டது. மகளிர் இரட்டையர் பிரிவில், செக்குடியரசின கேட்ரினா சினியகோவா, பார்போரா கிரெஜிகோவா ஜோடி, 6-3, 6-4 என்ற செட் கணக்கில், பெல்ஜியத்தின் எலிஸ் மெர்டென்ஸ், தைவானின் ஹ்சீஹ் சூவை ஜோடியை வீழ்த்தி பட்டம் வென்றது.

Related Stories: