கலைத்துறையினரை அச்சுறுத்துவதை ஏற்க முடியாது: காங்கிரஸ் எம்.பி.ஜோதிமணி பேட்டி

விராலிமலை: கலைத்துறையினரை அச்சுறுத்துவதை ஏற்க முடியாது என்று காங்கிரஸ் எம்.பி.ஜோதிமணி விராலிமலையில் பேட்டியளித்துள்ளார். திரைப்படம் எப்படி எடுக்க வேண்டும் என்பது படைப்பாளியின் தனிப்பட்ட உரிமை எனவும் திரைப்படத்தில் ஏதேனும் பிரச்னை இருந்தால் அங்கீகாரம் அளித்த சென்சார் போர்டை தான் கேள்வி கேட்க வேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் சூர்யாவுக்கும் ஜெய் பீம் படக்குழுவினருக்கும் ஆதரவு அளிப்பதுதான் எங்களது நிலைப்பாடு என ஜோதிமணி பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். 

Related Stories:

More