திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல 20,000 பக்தர்களை அனுமதிக்கலாம்: தீபத்திருவிழாவில் பக்தர்களுக்கு அனுமதி கோரிய வழக்கில் தமிழக அரசு பதில்

தி.மலை: திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல 20,000 பக்தர்களை அனுமதிக்கலாம் என்று தமிழ்நாடு அரசு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. தீபத்திருவிழாவுக்கு அனைத்து பக்தர்களையும் அனுமதிக்க கோரிய வழக்கில் தமிழ்நாடு அரசு பதில் அளித்துள்ளது. உள்ளூரை சேர்ந்த 5,000 பக்தர்கள் மற்றும் வெளியூரை சேர்ந்த 15,000 பக்தர்களை அனுமதிக்கலாம். பக்தர்கள் கோயிலுக்குள் அனுமதிக்க வாய்ப்பில்லை என்று தமிழ்நாடு அரசு தகவல் அளித்துள்ளது. திருவண்ணாமலை கோயிலில் பரணி தீபம் ஏற்றும் நிகழ்வில் கட்டளைதாரர்கள் 300 பேரை அனுமதிக்கலாம்.

Related Stories: