×

சென்னையில் இருந்து 310 கிமீ தொலைவில் காற்றழுத்த தாழ்வு மண்டலம்... வட தமிழகம் - தெற்கு ஆந்திரா இடையே நாளை அதிகாலை கரையை கடக்கிறது!!

சென்னை: வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் வட தமிழகம் - தெற்கு ஆந்திரா இடையே நாளை அதிகாலையில் கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுவடைந்தது. இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி தெற்கு ஆந்திரா - வட தமிழக கடற்கரை நோக்கி நகர்ந்து வருகிறது. காலையில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்ற நிலையில், தற்போது இது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்தது.

தற்போதைய நிலவரப்படி, காற்றழுத்த தாழ்வு மண்டலம், சென்னையில் இருந்து 310 கிமீ தென் கிழக்கு திசையில் நீடிக்கிறது. இந்த நிலையில் இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வட தமிழகம் - தெற்கு ஆந்திரா இடையே நாளை அதிகாலையில் கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டத்தில் அதிகனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக சென்னை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களிலும், புதுச்சேரி மாநிலத்திலும் இன்று அதி கனமழை பெய்யும் என்பதால் வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதே போன்று திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, சேலம், பெரம்பலூர், அரியலூர், தருமபுரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.அதாவது கனமழை முதல் மிக கனமழை வரை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஏனைய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


Tags : Chennai ,North TN ,South Andra , வானிலை ஆய்வு மையம்
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...