×

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக முனீஸ்வர் நாத் பண்டாரி நியமனம்: ஓரிரு நாட்களில் பதவியேற்பார்..!

சென்னை: சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக முனீஸ்வர் நாத் பண்டாரி நியமனம் செய்யப்பட்டுள்ளார். சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த சஞ்சீப் பானர்ஜியை, மேகாலயா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்க, உச்ச நீதிமன்றத்தின் கொலீஜியம் அமைப்பு பரிந்துரை செய்தது.

இதற்கு அண்மையில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்து உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து மேகாலயா மாநில உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவி ஏற்க, சாலை மார்க்கமாக, சஞ்சீப் பானர்ஜி நேற்று புறப்பட்டுச் சென்றார். இதையடுத்து, முனீஸ்வர் நாத் பண்டாரி ஓரிரு நாட்களில் சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவி ஏற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனையடுத்து, உயர் நீதிமன்ற நீதிபதியாக பதவி ஏற்க உள்ள முனீஸ்வர் நாத் பண்டாரியின் பணிக்காலம் 2022ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 12ம் தேதியுடன் முடிவடைகிறது. இதற்கிடையே, அலகாபாத்தில் இருந்து மாற்றலாகி வரும் முனீஸ்வர் நாத் பண்டாரி, தலைமை நீதிபதியாக பொறுப்பேற்கும் வரை, சென்னை உயர் நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதியாக, துரைசாமி செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Muneeswar Nath Bandari ,Chief Justice ,Chennai High Court , Chennai, Chief Justice of the High Court, Muneeswar Nath Bandari, Appointed
× RELATED சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக ஆர்.மகாதேவன் நியமனம்