தி. மலை திருவிழா : மகா தீபதற்கான கொப்பரைக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, 2,668 அடி உயர மலை உச்சிக்கு கொண்டு செல்லப்பட்டது!!

திருவண்ணாமலை : திருவண்ணாமலையில் நாளை மாலை ஏற்றப்படும் மகா தீபதற்கான கொப்பரை மலை உச்சிக்கு கொண்டு செல்லப்பட்டது. திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை மகா தீபவிழா கடந்த 10ம்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது. தினமும் காலையிலும் இரவிலும் சுவாமிகள் வாகனங்களில் எழுந்தருளி கோயில் உட்பிரகாரத்தில் வலம் வந்து அருள்பாலித்தனர்.இந்த நிலையில் தீப திருவிழாவின் நிறைவு நாளான நாளை அதிகாலை 4 மணிக்கு அண்ணாமலையார் கருவறையின் முன் பரணி தீபமும் மாலை திருக்கோவில் பின்புறம் உள்ள 2,668 அடி உயரம் கொண்ட மலையின் மீது மஹா தீபமும் ஏற்றப்பட உள்ளது.

தீப திருவிழாவிற்கு செல்ல பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், மலை உச்சியில் ஏற்றப்படும் தீப கொப்பரைக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு 15 பேர் மூலம் மலை உச்சிக்கு கொண்டு செல்லப்பட்டது. 5.9 அடி உயருமும் 250 கிலோ எடையும் கொண்ட இந்த மகா தீப கொப்பரையானது பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய 3 அடுக்குகளாக செய்யப்பட்டுள்ளது. மகா தீப கொப்பரையில் ஆன்மீக பக்தர்கள் காணிக்கையாக வழங்கப்படும் 3,500 லிட்டர் நெய் மற்றும் காடா துணி பயன்படுத்தி மகா தீபம் ஏற்றப்படுகிறது.  

Related Stories: