×

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுவடைந்தது.... மழையின் தீவிரம் மேலும் அதிகரிக்கக் கூடும் : இந்திய வானிலை ஆய்வு மையம்!!

சென்னை : வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுவடைந்ததாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுப்பகுதி வலுப்பெறாது என்று நேற்று வரை கணிக்கப்பட்ட நிலையில் இன்று அது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்றுள்ளது. தெற்கு ஆந்திரா - வட தமிழக கடற்கரை நோக்கி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நகர்ந்து வருகிறது (ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, புதுச்சேரியில் இருந்து 300கிமீ கிழக்கு - தென் கிழக்கு திசையில் மையம் கொண்டுள்ளது. சென்னையில் இருந்து 340 கிமீ தென் கிழக்கு திசையில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நிலை கொண்டுள்ளது). அடுத்த 12 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெறுகிறது.

காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் போது மழையின் தீவிரம் மேலும் அதிகரிக்கக் கூடும். அடுத்த 24 மணி நேரத்தில் ராயலசீமா, தெற்கு கடலோர ஆந்திரா மற்றும் அதை ஒட்டிய வட தமிழகம் ஆகிய பகுதிகளில்  அதிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.தென்மேற்கு,அதை ஒட்டிய மேற்கு மத்திய வங்கக்கடல் மற்றும் தமிழ்நாடு-புதுச்சேரி-தெற்கு ஆந்திரப் பிரதேச கடற்கரையோரங்களில் பலத்த காற்று மணிக்கு 45-65 கிமீ வேகத்தில் வீசக்கூடும். தென்மேற்கு மற்றும் அதை ஒட்டிய மேற்கு மத்திய வங்கக் கடலிலும், தமிழ்நாடு-புதுச்சேரி-தெற்கு ஆந்திரப் பிரதேசக் கடலோரப் பகுதிகளிலும் கடல் சீற்றத்துடன் இருப்பதால், மீனவர்கள் நவம்பர் 19ம் தேதி  வரை இந்தப் பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள், எனத் தெரிவித்துள்ளது.


Tags : Indian Meteorological Center , காற்றழுத்த தாழ்வுப் பகுதி
× RELATED ‘குளு குளு அறிவிப்பு’.. கொளுத்தும்...