×

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் 29ல் தொடக்கம்: பெட்ரோல் விலை உயர்வு, லக்கிம்பூர் விவகாரம் குறித்து விவாதிக்க எதிர்கட்சிகள் திட்டம்!!

டெல்லி : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் வரும் 29ம் தேதி தொடங்கி டிசம்பர் மாதம் 23 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாத இறுதியில் தொடங்கப்படும். கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக குளிர்கால தொடர் நடத்தப்படவில்லை. இந்நிலையில், நடப்பாண்டிற்கான குளிர்கால கூட்டத் தொடர் வரும் 29ம் தேதி தொடங்கி டிசம்பர் 23ம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

குளிர்கால கூட்டத் தொடரிலும் கொரோனா நடைமுறைகள் பின்பற்றப்படும். கூட்டத்தொடரில் பங்கேற்கும் எம்பிக்கள் கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும். கொரோனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். சமூக இடைவெளி பின்பற்ற வேண்டும். குளிர்கால தொடர் 20 அமர்வுகள் நடத்தப்படும் என கூறப்படுகிறது. விரைவில் உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவை தேர்தல் நடக்க உள்ள நிலையில், குளிர்கால தொடர் தொடங்க இருப்பது குறிப்பிடத்தக்கது. இம்முறை, பண வீக்கம், பெட்ரோல், டீசல் விலை உயர்வு, சமையல் எண்ணெய் விலை உயர்வு, காஷ்மீரில் பொதுமக்கள் மீது தீவிரவாதிகள் தாக்குதல், லக்கிம்பூரில் விவசாயிகள் கொல்லப்பட்ட விவகாரம் , மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகளின் போராட்டம் உள்ளிட்ட விவகாரங்களை எதிர்க்கட்சிகள் எழுப்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags : Winter Session of Parliament ,Lakhimpur , குளிர்கால கூட்டத்தொடர்
× RELATED அசாம் மாநிலத்தில் பதற்றம் ராகுல்...