×

ஓய்வுபெற்ற எஸ்ஐயை காரில் கடத்தி ₹25 லட்சம் பறித்த பிரபல ரவுடி எண்ணூர் மோகன் கைது: 20க்கும் மேற்பட்ட வழக்கில் தொடர்புடையவர்

சென்னை: சென்னையில் ஓய்வுபெற்ற எஸ்ஐயை காரில் கடத்தி ₹25 லட்சம் பறித்த விவகாரத்தில் தலைமறைவாக இருந்த ரவுடி மோகனை போலீசார் கைது செய்தனர். அவர் மீது பல்வேறு காவல் நிலையங்களில் 20க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்துள்ளது. சென்னை சேத்துப்பட்டு ஹாரிங்டன் சாலையை சேர்ந்தவர் மூசா (85). சென்னை மாநகர காவல் துறையில் உதவி ஆய்வாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். ஓய்வு பெற்ற பிறகு மூசா, குரோவைடு ட்ரேடு விங்ஸ் என்ற பெயரில் ஆந்திராவில் செம்மரம் ஏலம் எடுத்து அதை விற்பனை செய்து வருகிறார். இவருக்கு பஷீர் மற்றும் ஷரிப் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். மூத்த மகன் பஷீர் உத்தண்டியிலும், ஷரிப் தனது தந்தை மூசாவுடனும் வசித்து வருகிறார்.

இந்நிலையில், கடந்த அக்டோபர் 3ம் தேதி மூசாவை அவரது வீட்டில் இருந்து 6 பேர் கொண்ட கும்பல் கடத்தினர். பின்னர் மூசாவை விடுவிக்க அவரது மகன் ஷரிப்பிற்கு போன் செய்து ₹3 கோடி கேட்டனர். பிறகு நடத்திய பேச்சுவார்த்தைக்கு பிறகு ₹25 லட்சம் கொடுத்தால் மூசாவை விடுவிப்பதாக தெரிவித்தனர். இதுகுறித்து பஷீர் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். பிறகு கடத்தல்காரர்கள் கூறியபடி கடந்த அக்டோபர் 6ம் ேததி எழும்பூர் அல்சா மால் அருகே ₹25 லட்சம் பெற்று மூசாவை அவரது மகன் மீட்டார். அப்போது மறைந்து இருந்த போலீசார் காரில் தப்பிக்க முயன்ற குற்றவாளிகளான முன்னாள் ஊழியர்கள் அறுப்பு குமார், அவரது நண்பர் பிரகாஷ், தோழி சங்கீதா ஆகியோரை துப்பாக்கி முனையில் கைது செய்தனர்.

தொடர்ந்து, அவர்களிடம் இருந்து ₹25 லட்சம், கடத்தலுக்கு பயன்படுத்திய 2 கார்கள், ஒரு துப்பாக்கி, 3 மோதிரங்கள், 3 செல்போன்கள், 2 வாட்ச் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த சங்கீதாவின் சசோதரன் சதீஷ்குமாரை கடந்த மாதம் போலீசார் கைது செய்தனர். மேலும், இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான பல்வேறு காவல் நிலையங்களில் கொலை உட்பட 20க்கும் மேற்பட்ட வழக்கில் தொடர்புடைய எண்ணூரை சேர்ந்த ரவுடி மோகனை செல்போன் சிக்னல் உதவியுடன் போலீசார் ேநற்று முன்தினம் இரவு கைது செய்தனர். அவரிடம் கடத்தல் குறித்து  விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Ennore Mohan , Retired, SI, in car, ₹ 25 lakh, rowdy, arrested
× RELATED சென்னை தாம்பரம் அருகே...