×

தியாகராஜர் சுவாமி கோயிலில் ஆதிபுரீஸ்வரருக்கு கவசம் திறப்பு

சென்னை: இந்து சமய அறநிலையத்துறை வெளியிட்டுள்ள அறிக்கை: திருவொற்றியூர் வடிவுடையம்மன் உடனுறை தியாகராஜர் கோயிலில் இன்று மாலை ஆதிபுரீஸ்வரருக்கு கவசம் திறந்து புனுகு சாம்பிராணி தைலாபிஷேகமும், மஹா அபிஷேகமும் இரவு தியாகராஜ பெருமான் உள்புறப்பாடு உற்சவமும் நடைபெறும். தொடர்ந்து நாளை மற்றும் நாளை மறுநாள் கவசமின்றி மூலவரை தரிசனம் செய்ய இயலும்.

நவம்பர் 20ம் தேதி இரவு 8 மணியளவில் அர்த்தஜாம பூஜைக்குப்பின் கவசம் மீண்டும் அணிவிக்கப்படும். ஆண்டுக்கு ஒருமுறை இந்த மூன்று தினங்களில் மட்டுமே கவசமின்றி சுவாமியை முழுமையாக தரிசிக்கலாம்.  கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு தேவையான குடிநீர் வசதி, பிரசாதங்கள் விநியோகிக்கப்படவுள்ளது. மேலும், பக்தர்கள் விரைவு தரிசனத்திற்கு www.hrce.tn.gov.in இணையதளம் மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : Adipureeswarar ,Thiyagaraja Swamy Temple , Thiyagaraja Swamy Temple, to Adipureeswarar, shield
× RELATED பெரியபாளையம் அருகே ஆத்துப்பாக்கம்...