×

தேசிய கம்பெனி சட்ட தீர்ப்பாய சென்னை அமர்வில் நிலுவை வழக்குகள் காலியிடங்கள் எத்தனை?: ஒன்றிய அரசு அறிக்கை தர ஐகோர்ட் உத்தரவு

சென்னை: தேசிய கம்பெனி சட்ட தீர்ப்பாயத்தின் சென்னை அமர்வில் நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு ஒன்றிய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  சென்னையில் உள்ள தேசிய கம்பெனி சட்ட தீர்ப்பாயத்தின் இரு அமர்வுகளில் உள்ள காலியிடங்களை நிரப்பக் கோரியும், மூன்றாவது அமர்வை அமைக்க கோரியும் சென்னையை சேர்ந்த வெங்கட சிவகுமார் என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
 இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி, நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, தேசிய கம்பெனி சட்ட தீர்ப்பாயத்தின் சென்னை அமர்வில் உள்ள காலியிடங்களை நிரப்ப, விண்ணப்பங்கள் வரவேற்று விளம்பரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. மூன்றாவது அமர்வு அமைப்பது என்பது குடியரசு தலைவரின் தனி அதிகாரத்துக்கு உட்பட்டது என்று ஒன்றிய அரசு தரப்பில் தெரிவிக்கபட்டது. இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், காலியிடம் நிரப்பியது குறித்தும், சென்னை அமர்வுகளில் நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்தும் ஒன்றிய அரசு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு விசாரணையை நவம்பர் 23ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

Tags : National Company Law Tribunal ,Chennai ,Government , National, Company Law Tribunal, Chennai, Vacancies, iCourt
× RELATED சட்டமன்ற நிகழ்வுகள் நேரடி ஒளிபரப்பு;...