×

காஞ்சி வரதராஜபெருமாள் கோயிலில் அத்திவரதர் அனந்தசரஸ் குளம் நிரம்பியது

காஞ்சிபுரம்: வடகிழக்கு பருவமழையால், கடந்த ஒரு வாரமாக பெய்த கனமழையில், காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் உள்ள அனந்தசரஸ் குளத்தில் தண்ணீர் நிரம்பியுள்ளது. வடகிழக்கு பருவமழை காரணமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக தொடர்ந்து கனமழை பெய்தது. இதையொட்டி,  காஞ்சிபுரத்தில் உள்ள வரதராஜ பெருமாள் கோயிலில் உள்ள அனந்தசரஸ் குளம் 2 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் முழுமையாக நிரம்பி ரம்மியமாக காட்சியளிக்கின்றது. காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் நாற்பது ஆண்டுகளுக்கு ஒருமுறை 48 நாட்கள் அத்திவரதர் வைபவம் நடத்தப்படும்.

இதையொட்டி, கடந்த 2019ம் ஆண்டு அத்திவரதர் வைபவம் நடந்தது. அதன்பிறகு, அத்தி வரதர் வைக்கப்பட்டுள்ள ஆனந்தசரஸ் குளத்தில் தற்போது தண்ணீர் முழு கொள்ளளவு எட்டியுள்ளது. வரதராஜ பெருமாள் கோயிலுக்கு தமிழகம் மட்டும் இல்லாமல் குறிப்பாக ஆந்திரா, கர்நாடகா, கேரளா என பல்வேறு வெளி மாநில, வெளி நாட்டு சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். தற்போது அத்திவரதர் கோயில் குளம் நிரம்பியதால் அதிகளவில், சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் வந்து குளத்தில் நின்று புகைபடம் எடுத்து செல்கின்றனர். கடந்த 2019ம் ஆண்டு அத்திவரதர் வைபவ விழாவில் ஒரு கோடிக்கு மேற்பட்ட பக்தர்கள் தரிசனம் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Attivarathar Ananthasaras ,Kanchi Varatharajaperumal temple , Attivarathar Ananthasaras pool at Kanchi Varatharajaperumal temple was filled
× RELATED கோவை மாவட்டம் முண்டாந்துறை...