×

டபுள்யுடிஏ பைனல்ஸ் டென்னிஸ்; பைனலில் முகுருசாவுடன் கோன்டவெய்ட் பலப்பரீட்சை

குவாதலஜாரா: டபுள்யுடிஏ பைனல்ஸ் மகளிர் டென்னிஸ் தொடரின் ஒற்றையர் பிரிவு பைனலில் ஸ்பெயின் வீராங்கனை கார்பினி முகுருசாவுடன் எஸ்டோனியாவின் அனெட் கோன்டவெய்ட் மோதுகிறார். உலக தரவரிசையில் டாப் 8 வீராங்கனைகள் பங்கேற்கும் இத்தொடர், மெக்சிகோவின் குவாதலஜாரா நகரில் நடந்து வருகிறது. ரவுண்டு ராபின் லீக் ஆட்டங்களின் முடிவில் இரு பிரிவிலும் முதல் 2 இடங்களைப் பிடித்த முகுருசா, படோசா, அனெட், சாக்கரி ஆகியோர் அரையிறுதிக்கு முன்னேறினர். முதல் அரையிறுதியில் ஸ்பெயின் வீராங்கனைகள்  முகுருசா (6வது ரேங்க்), பவுலா படோசா(7வது ரேங்க்) மோதினர். அதிரடியாக விளையாடி புள்ளிகளைக் குவித்த  முகுருசா 6-3, 6-3 என நேர் செட்களில்  படோசாவை வீழ்த்தி பைனலுக்கு முன்னேறினார். இப்போட்டி 1 மணி, 25 நிமிடத்தில் முடிவுக்கு வந்தது.

2வது அரையிறுதியில் மரியா சாக்கரி (கிரீஸ், 4வது ரேங்க்), கோன்டவெய்ட் (8வது ரேங்க்) விளையாடினர். முதல் செட்டை  அனெட் 6-1 என கைப்பற்ற, 2வது செட்டை சாக்கரி 6-3 என வசப்படுத்தினார். கடைசி செட்டில் அதிரடியாக விளையாடிய அனெட் 6-1, 3-6, 6-3 என்ற கணக்கில் வென்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றார். விறுவிறுப்பாக இப்போட்டி 2 மணி, 2 நிமிடங்களுக்கு நீடித்தது. சாம்பியன் யார் என்பதை தீர்மானிக்கும் இறுதிப் போட்டியில் முகுருசா - அனெட் மோதுகின்றனர். இதே தொடரின் இரட்டையர் பிரிவு பைனலில் சூ வெய் சை (சீன தைபே) - எலிஸ் மெர்டன்ஸ் (பெல்ஜியம்) ஜோடியுடன் (3வது ரேங்க்) செக் குடியரசின் பார்போரா கிரெஜ்சிகோவா - கேதரினா சினியகோவா ஜோடி (முதல் நிலை) மோதுகிறது.


Tags : WTA ,Muguruza , WTA Finals Tennis; Conteweight bout with Muguruza in the final
× RELATED தமிழ்ச் சுவடியியல் (ம) பதிப்பியல்...