நூல் விலை உயர்வை கட்டுப்படுத்தக்கோரி ஈரோட்டில் 4 ஆயிரம் ஜவுளி கடைகள் அடைப்பு

ஈரோடு: நூல் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால், ஜவுளி உற்பத்தி தொழிலில் ஈடுபடும் வியாபாரிகள் கடும் நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர். நூல் விலை உயர்வை கட்டுப்படுத்தி, 2 மாதத்திற்கு ஒரு முறை அல்லது மாதம் ஒரு முறை விலை நிர்ணயம் செய்ய ஒன்றிய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி ஈரோட்டில் 2 நாள் கடை அடைப்பு போராட்டம் நடத்தப்படும் என ஜவுளி உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் தெரிவித்திருந்தனர். அதன்படி, ஈரோட்டில் நேற்று 4 ஆயிரம் ஜவுளி உற்பத்தியாளர்கள் தங்களது கடைகளை அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Related Stories: