தமிழக பெண் ஐபிஎஸ் அதிகாரி சிபிஐ இணை இயக்குநராக வித்யா ஜெயந்த் நியமனம்

புதுடெல்லி: தமிழக பெண் ஐபிஎஸ் அதிகாரி வித்யா ஜெயந்த் குல்கர்னி உட்பட 3 ஐபிஎஸ் அதிகாரிகளை சிபிஐ இணை இயக்குநர்களாக நியமித்து ஒன்றிய பணியாளர் நல அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. தமிழக காவல் துறையில் ஊழல் தடுப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறை இணை இயக்குநராக இருப்பவர் வித்யா ஜெயந்த் குல்கர்னி. இவரை சிபிஐ இணை இயக்குநராக நியமித்து ஒன்றிய பணியாளர் நலத்துறை அமைச்சகம் நேற்று உத்தரவு பிறப்பித்துள்ளது. 1998ம் ஆண்டு பிரிவு ஐபிஎஸ் அதிகாரியான வித்யா ஜெயந்த் 5 ஆண்டுகளுக்கு சிபிஐ இணை இயக்குநராக பணியாற்றுவார். அதன் பின் அவர் மீண்டும் தமிழக காவல் துறைக்கு திரும்புவார். ஒடிசா ஐபிஎஸ் அதிகாரி ஞான்ஷியாம்,் மகாராஷ்டிரா நாவல் பஜாஜ் ஆகியோரும் இணை இயக்குநர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

Related Stories: