×

தமிழக வனத்துறை கொடுத்த தகவலால் பெங்களூருவில் 401 ஆமைகள் பறிமுதல்

பெங்களூரு: கர்நாடகா மாநிலம் பெங்களூரு நகர போலீசாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் பெங்களூரு பஸ் நிலையத்தில் ஒருவரிடம் விசாரணை நடத்தினர். அவரிடம் இருந்து இரு பைகளில் வைத்திருந்த 401 இந்திய நட்சத்திர ஆமைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.  சட்டவிரோதமாக விற்க முயன்ற தமிழகத்தை சேர்ந்த ஹமாத் மீரா (51)  என்பவரை போலீசார் கைது செய்தனர். இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘நட்சத்திர ஆமைகளை சட்டவிரோதமாக விற்க முயன்ற நபர் மீது 1972ம் ஆண்டு வன விலங்குகள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவரிடம் இருந்து மொத்தம் 401 நட்சத்திர ஆமைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

அதில், 21 நட்சத்திர ஆமைகள் இறந்திருந்தன. மேலும் 21 ஆமைகள் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்தன. இவற்றில் 380 ஆமைகள் உயிருடன் உள்ளன. உயிருக்கு ஆபத்தான ஆமைகளை பேனர்கட்டா தேசிய பூங்காவில் ஒப்படைக்கப்பட்டு, அவற்றுக்கு ெதாடர் சிகிச்சை அளிக்கப்படும். தமிழக வனத்துறை கொடுத்த தகவலின் அடிப்படையில் ஆமைகளை கடத்தியவரை கைது செய்தோம். கடந்த மூன்று நாட்களில் நகரத்தில் இரண்டாவது முறையாக நட்சத்திர ஆமைகள் கைப்பற்றப்பட்டுள்ளது. ஏற்கனவே கே.ஆர் சந்தை பேருந்து நிலையத்தில் நட்சத்திர ஆமைகள் கைப்பற்றப்பட்டது’ என்றார்.

Tags : Bengaluru ,Tamil Forest Department , 401 turtles seized in Bangalore
× RELATED பாலங்கள் சீரமைப்பு பணி காரணமாக மைசூரு...