டெல்லியில் காற்று மாசை குறைக்க போதுமான நடவடிக்கை எடுக்கவில்லை!: விவசாய கழிவுகளை எரிப்பது பற்றியே பேசுவதற்கு சுப்ரீம் கோர்ட் கண்டனம்..!!

டெல்லி: டெல்லியில் காற்று மாசை குறைப்பதற்கு ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் போதுமான நடவடிக்கை எடுக்கவில்லை என்று உச்சநீதிமன்றம் கட்டணம் தெரிவித்திருக்கிறது. டெல்லியில் அதிகரித்து வரும் காற்று மாசை கட்டுப்படுத்துவது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி. ரமணா தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது காற்று மாசை குறைக்க டெல்லி மற்றும் அதனை ஒட்டிய மாநிலங்களில் விதிக்கப்பட்டிருக்கும் கட்டுப்பாடுகளை விளக்கி ஒன்றிய அரசு சார்பில் பிராமணப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.

அதில் டெல்லி உள்ளிட்ட தலைநகர் பகுதிகளில் உள்ள மாநில அரசு ஊழியர்கள் 50 சதவீதம் பேர் வீட்டில் இருந்து பணிபுரிய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டாலும் ஒன்றிய அரசு ஊழியர்களை குறைவாக பயன்படுத்துவதற்கான ஏற்பாடுகளை செய்துகொள்ள வேண்டும் என கூறப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், மாசுபாட்டை கட்டுப்படுத்த என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொடர்ந்து கேட்டுக் கொண்டிருக்கிறோம். நீங்கள் மீண்டும், மீண்டும் விவசாய கழிவுகளை எரிப்பது பற்றியே ஏன் பேசி கொண்டிருக்கிறீர்கள் என்று கேள்வி எழுப்பினர். விவசாயிகளால் ஏன் உத்தரவை பின்பற்ற முடியவில்லை என யாராவது யோசித்தீர்களா என வினவினர்.

டெல்லியில் பட்டாசுக்கு தடை விதிக்கப்பட்ட பிறகும் தீபாவளியன்று எவ்வளவு பட்டாசுகள் வெடிக்கப்பட்டன தெரியமா? எனவும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். தொடர்ந்து, டெல்லியில் காற்று மாசுக்கு விவசாயிகள் மீது நட்சத்திர ஓட்டலில் இருப்பவர்கள் குற்றம் சாட்டுவதாக நீதிபதிகள் விமர்சனம் செய்துள்ளனர். ஆட்சியாளர்களும், அதிகார வர்க்கமும் காற்று மாசைத் தடுக்க எந்த முடிவும் எடுக்கத் தயாராக இல்லை என கூறிய நீதிபதிகள், உச்சநீதிமன்றமே முடிவு எடுக்கும் என சும்மா இருக்கும் மனோபாவம் அதிகாரிகளுக்கு வந்துவிட்டதாக கருத்து தெரிவித்துள்ளனர்.

Related Stories: