×

அம்மூர் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் 2,834 நெல் மூட்டைகள் விற்பனைக்கு வந்தன: உடனே பணம் கிடைப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை அடுத்த அம்மூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நேற்று விவசாயிகள் 2,834 நெல் மூட்டைகளை கொண்டு வந்து விற்பனை செய்தனர். நெல் மூட்டைகள் விற்பனையானதும்  அன்றைய தினமே வங்கி கணக்கில் பணம் செலுத்துவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
ராணிப்பேட்டை அடுத்த அம்மூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த ஏராளமான விவசாயிகள் தங்கள் விளை நிலங்களில் விளைந்த நெல்களை அங்கு கொண்டு வந்து விற்பனை செய்து அதற்கான பணத்தை பெற்று செல்கின்றனர். அதன்படி நேற்று வந்த 75 கிலோ நெல் மூட்டைகளின் விபரம்:

ஏடிடி 37 வகை நெல், குறைந்தபட்சம் 900க்கும், அதிகபட்சம் 1,429க்கும் விற்பனை செய்தனர். கோ 51 வகை நெல், குறைந்தபட்சம் 709க்கும், அதிகபட்சம் 1,144க்கும், கோ 45 வகை நெல் 1,130க்கும், என்.எல்.ஆர் வகை நெல் குறைந்தபட்சம் 941க்கும், அதிகபட்சம் 999க்கும், 1,010 நெல் வகை 1,007க்கும், வகை நெல் 1,117க்கும், சோனா வகை நெல் 750க்கும், அதிகபட்சம் 1,241க்கும் விற்பனை செய்யப்பட்டதாக அம்மூர் ஒழுங்குமுறை விற்பனை கூடக் கண்காணிப்பாளர் சே.ராமமூர்த்தி தெரிவித்தார்.  

மேலும், கடந்த காலங்களில் நெல் மூட்டைகள் வரத்து அதிகளவில் இருந்ததால், நெல் மூட்டைகள் சற்று நிதானமாக விற்பனை செய்யப்பட்டு, தாமதமாக விவசாயிகளின் வங்கி கணக்கில் பணம் செலுத்தப்பட்டது. ஆனால், தற்போது விவசாயிகள் எடுத்து வரும் நெல் மூட்டைகள் அன்றைய தினமே விற்பனை செய்யப்பட்டு, அன்றே விவசாயிகளின் வங்கி கணக்கில் பணம் செலுத்தப்படுகிறது. இதனால் விவசாயிகள் தற்போது மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


Tags : Ammoor Order System Sales Hall , Farmers
× RELATED சிதம்பரம் நடராஜர் கோயில் பரபரப்பு;...