×

கால்நடை பராமரிப்புத் துறையில் கருணை அடிப்படையில் 23 வாரிசுதாரர்களுக்கு பணிநியமன ஆணை வழங்கினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: கால்நடை பராமரிப்புத்துறையில் கருணை அடிப்படையில் 23 வாரிசு தாரர்களுக்கு பணிநியமன ஆணையை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று வழங்கினார். இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட அறிக்கை: முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று  தலைமைச் செயலகத்தில், கால்நடை பராமரிப்புத் துறையில் பணிக்காலத்தில் உயிரிழந்த 23 பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில், இளநிலை உதவியாளர்,  கால்நடை பராமரிப்பு உதவியாளர்,  பதிவறை எழுத்தர்,  அலுவலக உதவியாளர் மற்றும் காவலர் பணியிடங்களுக்கான பணிநியமன ஆணைகளை  வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு, கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ஜவஹர்,  கால்நடை பராமரிப்பு மற்றும் மருத்துவப் பணிகள் இயக்குநர் ஞானசேகரன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர். இவ்வாறு தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Tags : Chief Minister ,MK Stalin , Chief Minister MK Stalin issued appointment orders to 23 heirs on compassionate grounds in the field of animal care
× RELATED முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின்...