லஞ்ச ஒழிப்புத்துறையில் ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். மீதான புகார் - ஆர்.எஸ்.பாரதி பேட்டி

சென்னை: தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மீது அளித்த புகார் தொடர்பான விசாரணைக்காக திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி ஆஜராகினார். கடந்த ஏப்ரல் மாதம் 5ஆம் தேதி லஞ்ச ஒழிப்புத்துறையிடம் திமுக சார்பில் ஆர்.எஸ்.பாரதி ஒரு புகார் மனுவை அளித்திருந்தார். அந்த புகாரின் அடிப்படையில் மேல் விசாரணைக்கு சம்மன் அனுப்பப்பட்டதால் இன்று ஆஜராகி வாக்குமூலம் அளித்துள்ளார்.

வழக்கு விவரம்: சென்னை கோயம்பேட்டிற்கு அருகில் உள்ள அரசுக்கு சொந்தமான 10.5 ஏக்கர் நிலத்தை 2021, பிப்ரவரி மாதம் 8ஆம் தேதி (சட்டமன்ற தேர்தல் குறித்த அறிவிப்பு வெளியிடுவதற்கு 10 - 15 நாட்களுக்கு முன்னதாக) அரசுக்கு பேரிழப்பு ஏற்படுத்தி சுயலாபத்திற்காக இதை விற்க வேண்டும் என்று ஒரு அவரச சட்டத்தை போடுகின்றனர். ஆர்.எஸ்.ஓ 24 விதிப்படி அரசுக்கு சொந்தமான எந்த இடமாக இருந்தாலும் அதை தனிப்பட்ட நபருக்கு விற்க கூடாது. அல்லது பொது காரியத்திற்கு மருத்துவமனை, கல்விக்கூடம், கல்லூரி அல்லது உள்ளாட்சி அமைப்பு கட்டிடங்களுக்கு தான் கொடுக்க வேண்டும். அப்படி ஏதேனும் அரசுக்கு தேவையில்லாத இடத்தை நீங்கள் விற்கவேண்டும் என்று நினைத்தால் அதை ஏலத்தில் தான் விற்க வேண்டும் என்பது சட்டத்தில் உள்ளது. இதனை முன்னாள் முதல்வர் ஜெயலலிதா முன்னர் மீறியுள்ளார்.

தற்போது ஓ.பி.எஸ், இ.பி.எஸ் மீறியுள்ளனர். ஆனால் கோயம்பேடு அருகே 10.5 ஏக்கர் நிலத்தை ஓ.பி.எஸ் மற்றும் மற்றவர்கள் சேர்ந்து ஏலத்தில் விடாமல் பாஷ்யம் கன்ஸ்ட்ரக்சன் என்ற ஒரு நிறுவனத்திற்கு அடிமாட்டு விலைக்கு விற்றுள்ளனர். பூந்தமல்லி நெடுஞ்சாலையும், கோயம்பேடும் சந்திக்கின்ற இடம் இந்த 10.5 ஏக்கர் நிலம். இந்த இடத்தை ஒரு சதுரஅடி ரூ.12,500க்கு விற்றுள்ளனர். அந்த இடத்தின் சந்தை மதிப்பு ரூ.25,000. ஓ.பன்னீர்செல்வத்தின் 3 பிள்ளைகள் விஜயன் டெவலப்பர்ஸ் என்ற நிறுவனம் வைத்துள்ளனர். இந்த நிறுவனம் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறது. இதில் ஓ.பி.எஸ்ஸின் 3 பிள்ளைகளும் பங்குதாரர்கள். ஓ.பி.எஸ் பயன்படுத்தும் கார், அவரின் குடும்பத்தினர் பயன்படுத்தும் கார் என அத்தனையும் அந்த நிறுவனத்தின் மூலம் வாங்கி இருப்பதாக தகவல்கள் உள்ளன. இந்த பாஷ்யம் கன்ஸ்ட்ரக்சன், விஜயன் டெவலப்பர்ஸ் நிறுவனத்துடன் தொடர்புடையது.

இதனால் 10.5 ஏக்கர் நிலத்தை பாஷ்யம் கன்ஸ்ட்ரக்சன் நிறுவனத்திற்கு அரசு கொடுத்துள்ளது. இதனால் அரசுக்கு ஏறத்தாழ 500 கோடி ரூபாய் இழப்பு. இந்த இழப்புக்கு காரணமாக இருந்தது உதயகுமார். 2078 குடியிருப்புகள் கட்டியுள்ள அபார்ட்மென்டுக்கு ஒரே வாரத்தில் CMDA அனுமதி கொடுத்துள்ளனர். தேர்தல் வந்தால் செய்ய முடியாது என்று அவசர அவசரமாக திட்டமிட்டு அரசு நிலத்தை கொள்ளையடிக்கும் நோக்கத்தோடு செய்துள்ளனர். ஆகவே இந்த 3 பேர் மீதான திமுகவின் புகார் மீதான விசாரணைக்கு ஆர்.எஸ்.பாரதி நேரில் ஆஜரானார்.

Related Stories: