மழை வெள்ள பாதிப்பை சீரமைக்க தமிழ்நாட்டிற்கு ரூ. 2,079 கோடி வழங்குக : ஒன்றிய அமைச்சர் அமித்ஷாவிடம் திமுக எம்.பி. டி.ஆர்.பாலு வலியுறுத்தல்!

டெல்லி : மழை வெள்ள பாதிப்பை சீரமைக்க தமிழ்நாட்டிற்கு ரூ. 2,079 கோடி வழங்குமாறு ஒன்றிய அரசிடம் திமுக எம்.பி. டி.ஆர்.பாலு கோரிக்கை விடுத்துள்ளார்.டெல்லியில் ஒன்றிய அமைச்சர் அமித்ஷாவுடன் திமுக எம்.பி.க்கள் குழு தலைவர் டி.ஆர்.பாலு சந்திப்பு மேற்கொண்டார். அப்போது தமிழ்நாட்டிற்கு வெள்ள பாதிப்பு நிவாரணமாக உடனடியாக ரூ. 550 கோடியை வழங்குமாறு அமித்ஷாவிடம் கோரிக்கை வைத்தார்.

நவம்பர் 8 முதல் நவம்பர் 14ம் தேதி வரை வழக்கத்தை விட 49.6% மழை பெய்துள்ளது என்பதை அமித்ஷாவிடம் குறிப்பிட்ட பாலு, தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழையால் 25 மாவட்டங்களில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்றார்.

மேலும் தமிழ்நாட்டின் டெல்டா மாவட்டங்களில்  49,757 ஹெக்டேர் பயிர்கள் மழையால் சேதம் அடைந்துள்ளதாகவும் 25 மாவட்டங்களில் 12 மாவட்டங்கள் மழையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அமித்ஷாவிடம் டி.ஆர்.பாலு எடுத்துரைத்தார்.எனவே தேசிய பேரிடர் மேலாண்மை நிதியில் இருந்து தமிழகத்திற்கு வெள்ள நிவாரணமாக ரூ. 2,079 கோடியை ஒதுக்க வேண்டும் என்றும் முதற்கட்டமாக ரூ. 550 கோடியை உடனடியாக வழங்க வேண்டும் என்றும் அமித்ஷாவிடம் பாலு வலியுறுத்தி உள்ளார்.

Related Stories: