உத்திரமேரூரில் ஒழுங்கு முறை விற்பனைக் கூடம்: முதல்வர் திறந்து வைத்தார்

உத்திரமேரூர்: உத்திரமேரூரில் ₹2 கோடியே 15 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட ஒழுங்கு முறை விற்பனை கூடத்தை, தமிழக முதல்வர் மு.க.ஸ்டபாலின், காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூரில் வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறை கீழ் இயங்கும் ஒழுங்குமுறை விற்பனை கூடம் வேடப்பாளையம் பகுதியில் உள்ளது. இங்கு ₹2 கோடியே 15 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட 500 மெட்ரிக் டன் மற்றும் ஆயிரம் மெட்ரிக் டன் கொண்ட  கிடங்கை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் நேற்று திறந்து வைத்தார்.

இதை தொடர்ந்து கலெக்டர் ஆர்த்தி, காஞ்சி திமுக தெற்கு மாவட்ட செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏ ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி வைத்து ஒழுங்கு முறை விற்பனை கூடத்தை தொடங்கி வைத்தனர். உத்திரமேரூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் விவசாயிகள் கொண்டு வரும் விளை பொருட்களை மறைமுக ஏலம் மூலம் விற்பனை செய்து பயனடையலாம். மேலும் விவசாயிகள் விளைப் பொருளுக்கு சரியான விலை கிடைக்காத பட்சத்தில், 15 நாட்களுக்கு எவ்வித கட்டணமும் இல்லாமல் விளைப் பொருட்களை இருப்பு வைத்து பயனடையலாம் என வேளாண் விற்பனைக் குழு தனி அலுவலர் மற்றும் செயலாளர் ஆகியோர் கூறினர்.

Related Stories: