×

ஆர்.கே.பேட்டை அருகே பரபரப்பு மழைநீரை வெளியேற்ற ஆக்கிரமிப்புகள் அகற்றம்: அதிகாரிகளுடன் பொதுமக்கள் வாக்குவாதம்

பள்ளிப்பட்டு: ஆர்.கே.பேட்டை அருகே மழைநீரை வெளியேற்ற ஆக்கிரமிப்புகளை அதிகாரிகள் அகற்றியதால், அப்பகுதி மக்கள் கடும் வாக்குவாத்தில் ஈடுபட்டனர். இச்சம்பவத்தால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. திருவள்ளூர் மாவட்டம் ஆர்கே பேட்டை ஒன்றியத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்தது. இதுபோல் கொட்டித் தீர்த்த கன மழைக்கு பெரும்பாலான நீர்நிலைகள் நிரம்பியுள்ளன. இதில், வீரமங்கலம் கிராமத்தில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான ஏரி முழு கொள்ளளவை எட்டி  உபரிநீர் வெளியேற வசதியின்றி மழைநீர் அங்குள்ள குடியிருப்பு பகுதிகளில் சூழ்ந்துள்ளது. இதையடுத்து, ஆர்கே பேட்டை வட்டாட்சியர் மணிவாசகம் தலைமையில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள், போலீசார் பாதுகாப்புடன் வெள்ளம் சூழ்ந்துள்ள வீடுகளுக்கு அருகில் சுற்றுச்சுவரை உடைத்து மழைநீர் வெளியேற்றும் வகையில் பொக்லைன் இயந்திரம் மூலம் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் நேற்று ஈடுபட்டனர்.

இதை பார்த்ததும், அப்பகுதியில் குடியிருக்கும் மக்கள், அதிகாரிகளை முற்றுகையிட்டு கடும் எதிர்ப்பு தெரிவித்து, வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால், அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஆனாலும் போலீஸ் பாதுகாப்புடன் 3 வீடுகளின் சுற்றுச்சுவரை அதிகாரிகள் இடித்து தள்ளினர். இதுகுறித்து  மிஷன் மோடி  ஜனநாயக வளர்ச்சி அறக்கட்டளை மாநில தலைவர் டாக்டர் ஆர்.அருள்தாஸ் கூறுகையில், வீரமங்கலம் ஊராட்சி மன்ற அதிமுக பெண் தலைவியின் உறவினர், பிரதம மந்திரியின் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் முறைகேடு செய்துள்ளார். அதுபற்றி புகார் செய்ததால், எங்களை பழிவாங்கும் நோக்கில் எனது வீட்டின் சுற்றுச்சுவர் மற்றும் வீட்டு தோட்டத்தையும், மரங்களையும் சேதப்படுத்தினர். ஏரியில் இருந்து வெளியேறும் மழைநீர், முறையாக செல்ல கால்வாய் வசதி செய்யாமல் ஒரு சிலர் வீடுகள் மட்டும் இடிக்கப்பட்டது என்றார்.

Tags : RKpet , RK Pattai, agitation, rainwater, with authorities, argument
× RELATED மூன்றாவது முறையாக பாஜக ஆட்சிக்கு...