கடம்பத்தூர் ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம் இடியும் நிலையில் பழுதடைந்த பள்ளி கட்டிடங்களை அகற்ற வேண்டும்: தீர்மானம் நிறைவேற்றம்

திருவள்ளூர்: திருவள்ளூர் அடுத்த கடம்பத்தூர் ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம் மன்ற கூடத்தில் நடந்தது. ஒன்றிய குழு தலைவர் சுஜாதா சுதாகர் தலைமை வகித்தார். ஒன்றிய குழு துணைத் தலைவர் சரஸ்வதி ரமேஷ், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் எம்.ராம்குமார், க.வெங்கடேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஒன்றிய குழு உறுப்பினர்கள் க கே.திராவிடபக்தன், கேபிஎஸ்ஆர்.கார்த்திகேயன், மு.நரேஷ்குமார், எஸ்.ராணி, வி.எம்.சுரேஷ், கோ.ஹரிதரன், டி.யாமினி, பி.பூங்கோதை, பா தரணி, வி.கோவிந்தம்மாள், எஸ்.பிரசாந்த், சி.தயாளன், பா.சுபப்பிரியா, பா.சுமதி, மு.நீலாவதி ஆகியோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் விபத்தில் பலியான துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கோட்டீஸ்வரனுக்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

பிறகு கடம்பத்துார் ஒன்றியத்தில் வயலுார், கடம்பத்துார், பிரையாங்குப்பம் உள்பட பல்வேறு ஊராட்சிகளில் 40 ஆண்டுகள் பழமையான பழுதடைந்து பயன்படாமல் உள்ள பள்ளிக் கட்டிடங்களை இடித்து அகற்ற வேண்டும். சிட்ரம்பாக்கம், இலுப்பூர் உள்பட பல்வேறு ஊராட்சிகளில் உள்ள அரசு பள்ளிகளில் பழுதடைந்து பயன்பாடற்ற நிலையில் உள்ள சமையலறைக்கட்டிடங்களையும் இடித்து அகற்ற வேண்டும். பழுதடைந்த சாலைகளை சீரமைக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு வளர்ச்சி பணிகள் குறித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Related Stories: