பாமக முன்னாள் நிர்வாகி வீட்டில் வெடிகுண்டு வீச்சு: மதுரையில் பரபரப்பு

மதுரை: மதுரை, மேல  அனுப்பானடி ராஜமான் நகர் மெயின் ரோட்டில் வசித்து வருபவர் மாரிச்செல்வம். மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் வக்கீலாக உள்ளார்.  பாமக முன்னாள் மாநில இளைஞரணி துணைச்செயலாளர். நேற்று காலை டூவீலர்களில் வந்த மர்ம நபர்கள், மாரிச்செல்வத்ைத தேடியுள்ளனர். அவர் இல்லாததால், 2 நாட்டு வெடிகுண்டுகளை வீட்டின் மீது வீசி விட்டு தப்பினர். இந்த குண்டுகள் பலத்த சத்தத்துடன் வெடித்து சிதறின. இதில் சாலையில் நடந்து சென்ற சேகர் என்பவருக்கு காயம் ஏற்பட்டது.

சம்பவம் குறித்து போலீசார் கூறும்போது, ``மசாஜ் சென்டரில், பாலியல் தொழில் நடந்த புகாரில், கடந்த ஆகஸ்ட் மாதம் மாரிச்செல்வத்தை தெப்பக்குளம் போலீசார் கைது செய்தனர். இதனால், மாரிச்செல்வத்தின் பதவி பறிக்கப்பட்டு கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து  நீக்கப்பட்டார். அரசியல்ரீதியாகவோ, தொழில் முன்விரோதம்  காரணமாகவோ வெடிகுண்டுகள் வீசப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கிறோம்’’ என்றனர்.

Related Stories: