×

திருப்புவனம் ராமலிங்கம் கொலை வழக்கு 5 குற்றவாளிகள் குறித்து தகவல் தெரிவித்தால் தலா ₹ 5 லட்சம் பரிசு: என்ஐஏ அறிவிப்பு

சென்னை: தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே திருப்புவனத்தைச் சேர்ந்த பாமக பிரமுகரும், பாத்திரக்கடை நடத்தி வந்தவருமான ராமலிங்கம் என்பவர் கடந்த 2019ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 5ம் தேதி படுகொலை செய்யப்பட்டார். மத மாற்றத்தை தட்டிக்கேட்டதால் அவர் கொல்லப்பட்டதாக புகார் எழுந்தது. இந்த வழக்கு தொடர்பாக 16 பேர் மீது திருவிடைமருதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து 12 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதற்கிடையே இந்த வழக்கு மார்ச் மாதம் தேசிய புலனாய்வு பிரிவு போலீசாருக்கு மாற்றப்பட்டது. அதன் தொடர்ச்சியாக கேரள மாநிலம் கொச்சியை சேர்ந்த ஏ.எஸ்பி. சவுகத் அலி தலைமையில் 4 பேர் கொண்ட குழு இந்த வழக்கை விசாரணை நடத்தி வருகிறது.

இந்தநிலையில், இந்த கொலை வழக்கில் 5 பேரை தேடப்படும் நபராக தேசிய புலனாய்வு முகமை அறிவித்துள்ளது. முகமது அலி ஜின்னா (37), அப்துல் மஜீத் (40), புர்ஹானுதீன் (31), ஷாஹூல் ஹமீத் (30), நபீல் ஹாசன் (31) ஆகிய 6 பேருக்கு எதிராக கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. என்.ஐ.ஏ மேற்கண்ட நபர்களை கைது செய்ய தகவல் தருபவர்களுக்கு நபர் ஒன்றுக்கு ரூ.5 லட்சம் பரிசு சன்மானமாக வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளது. தகவல் தருபவர்கள் விபரம் ரகசியமாக பாதுகாக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. 5 குற்றவாளிகள் குறித்து, தேசிய புலனாய்வு முகமை, எண்.10, மில்லர்ஸ் சாலை, புரசைவாக்கம், சென்னை 600 010, கைபேசி எண்: 99623 61122, தொலைபேசி எண்: 044-2661 5100, info-che.nia@gov.in என்ற முகவரிக்கு தகவல் தெரிவிக்கலாம்.


Tags : Ramalingam ,NIA , Turnaround, Ramalingam murder, 5 convicts, பரிசு 5 lakh reward
× RELATED 20 ஆண்டுகள் போராட்டத்திற்கு பிறகு...