மைக் டைசனை சந்தித்தார் விஜய் தேவரகொண்டா

சென்னை: தெலுங்கு, தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் புரி ஜெகன்நாத் இயக்கத்தில் உருவாகும் படம், ‘லைகர்’. மார்ஷியல் ஆர்ட்ஸ் நிபுணர் பற்றிய கதை கொண்ட இப்படத்தில், சர்வதேச குத்துச்சண்டை வீரர் மைக் டைசன் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். தற்போது இப்படத்தின் ஷூட்டிங் அமெரிக்காவில் நடந்து வருகிறது. அப்போது மைக் டைசனை முதன்முதலில் நேரில் சந்தித்த விஜய் தேவரகொண்டா, அவருடன் சேர்ந்து எடுத்துக்கொண்ட போட்டோவை வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர், ‘இரும்பு மனிதர் மைக் டைசனை நான் நேருக்கு நேர் சந்தித்தேன். இந்த மனிதர் அன்பானவர். இவருடன் இணைந்து பணியாற்றும் ஒவ்வொரு தருணத்தையும் பொக்கிஷமாக பாதுகாப்பேன். அதிலும் இந்த தருணம் என் வாழ்நாளிலேயே மிகப்பெரிய பொக்கிஷமாக இருக்கும்’ என்று கூறியுள்ளார்.

Related Stories: