10.5% இடஒதுக்கீடு ரத்தை எதிர்த்து மேல்முறையீடு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு வன்னியர் சங்கத்தினர் நன்றி

சென்னை:  வன்னியர் குல சத்திரியர் கூட்டு இயக்கத் தலைவர் ராம.நாகரத்தினம், பொதுச்செயலாளர் ஆர்.ஏ.ஆர்.கே.சத்திரியர், ஆலோசகர் பெருந்தமிழன் ஆகியோர் வெளியிட்ட அறிக்கை: வன்னியர் குலசத்திரியர்களுக்கு 10.5சதவீதஉள் இட ஒதுக்கீட்டை உயர்நீதி மன்ற மதுரை கிளை ரத்து செய்துவிட்டது. இதுவன்னியர் சமுதாயத்திற்கு பேரிடியாக விழுந்தது. அப்போதே தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வோம் என்று அறிவித்தது. அதன்பேரில் 10.5% சதவித, உள்ஒதுக்கீட்டு வழக்கில்,  தமிழக அரசால், உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.  

2011ம் ஆண்டு சட்டமன்ற பொதுத்தேர்தலில் முத்தமிழறிஞர் கலைஞர்  நான் மீண்டும் ஆட்சிக்கு வந்தால்  வன்னியர் சமூகத்திற்கு அவர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப உள் தனி இடஒதுக்கீடு தருவேன் என்று திண்டிவனம் தேர்தல் பிரசார பரப்புரையில் உறுதியளித்தார். அவர் அளித்த உறுதியை விக்கிரவாண்டி தேர்தலுக்கு முன்பு 7.10.2019 அன்று விரிவான அறிக்கையின் மூலம் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். எனவே, கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் வன்னியர்களின் வாழ்வாதார உரிமையை மேல்முறையீடு செய்து சமூகநீதியை கட்டிக்காக்கும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு 2.5 கோடி வன்னியர் குல சத்திரியர்கள் சார்பாக கோடானுகோடி நன்றியை  தெரிவித்துக்கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: