×

₹66,000 கோடியில் 72 புதிய போயிங் விமானங்கள்: ஆகாசா ஏர் நிறுவனம் வாங்குகிறது

புதுடெல்லி: போயிங் நிறுவனத்திடம் இருந்து 72 புதிய விமானங்களை வாங்க இந்தியாவின் ஆகாசா ஏர் நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது. ஆகாசா ஏர் நிறுவனம் இந்தியாவில் செயல்பட ஒன்றிய அரசின் விமானப் போக்குவரத்து துறை கடந்த மாதம் தடையில்லா சான்று அளித்தது. இதனை முதலீட்டாளர் ராகேஷ் ஜூன்ஜூன்ச்வாலா, இண்டிகோ முன்னாள் தலைவர் ஆதித்யா கோஷ், ஜெட் ஏர்வேஸ் முன்னாள் சிஇஓ வினய் துபே இணைந்து நடத்த உள்ளனர்.

இந்நிலையில், துபாயில் நடந்த விமான கண்காட்சி 2021-ல், அமெரிக்காவின் பிரபல விமான தயாரிப்பு நிறுவனமான போயிங் நிறுவனத்திடம் இடமிருந்து புதிதாக 72 போயிங் 737 மேக்ஸ் ரக விமானங்களை ₹66,000 கோடி மதிப்பில் வாங்க ஆகாசா ஏர் நிறுவனம் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. 


Tags : Boeing ,Akasa Air , ₹ 66,000 crore, 72 new, Boeing, aircraft
× RELATED இந்திய ராணுவத்துக்காக அப்பாச்சி...