×

சோதனை என்ற பெயரில் பெண்களிடம் அத்துமீறும் வீரர்கள்: எல்லை பாதுகாப்பு படை குறித்து திரிணாமுல் எம்எல்ஏ சர்ச்சை கருத்து

கொல்கத்தா: சர்வதேச எல்லைகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருக்கும் எல்லை பாதுகாப்பு படையின் அதிகார வரம்பு 15 கி.மீ. தூரத்தில் இருந்து 50 கி.மீ. ஆக அதிகரிக்கப்படுவதாக கடந்த மாதம் ஒன்றிய உள்துறை அமைச்சகம் அறிவித்தது. இதற்கு எல்லையோர மாநிலங்களான பஞ்சாப், மேற்கு வங்க அரசுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. பஞ்சாபில் ஒன்றிய அரசின் இந்த அறிவிப்புக்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதைத் தொடர்ந்து, மேற்கு வங்கத்தில் நேற்று தீர்மானம் நிறைவேறியது.  

இந்நிலையில், சட்டப்பேரவையில் நேற்று நடந்த பிஎஸ்எப். அதிகார வரம்பு பற்றிய விவாதத்தின் போது, ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் எம்எல்ஏ உதயன் குகா, `எல்லைப் பகுதியில் வசிக்கும் மக்களின் மீது பிஎஸ்எப் வீரர்களின் அட்டூழியங்கள் கட்டவிழ்த்து விடப்படுகின்றன. சோதனை நடவடிக்கைகள் என்ற பெயரில் பெண்களிடம் அவர்கள் அத்துமீறுகின்றனர். வேலைக்கு சென்று திரும்பிய சிறுமி ஒருவள் இது குறித்து தனது தாயிடம் கூறியுள்ளார். எனவே, இவர்கள் தேசப்பற்றுள்ளவர்களாக இருக்க முடியாது,’ என்று கூறினார். எம்எல்ஏ குகாவின் இந்த கருத்து தற்போது அம்மாநிலத்தில் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு கண்டனம் தெரிவித்த பாஜ எம்எல்ஏ ஸ்ரீரூபா மித்ரா சவுத்ரி, `இந்த கருத்து திரிணாமுல் காங்கிரசின் மனநிலையை எடுத்து காட்டுகிறது,’ என தெரிவித்தார்.


Tags : Trinamool ,Border Security Force , Trial, to women, transgressors, soldiers
× RELATED மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால்...