×

விபச்சார தடுப்பு பிரிவில் இருந்தபோது புரோக்கர்களிடம் பல லட்சம் லஞ்சம் கீழ்ப்பாக்கம் இன்ஸ்பெக்டர் சாம் வின்சென்ட், சைதாப்பேட்டை இன்ஸ்பெக்டர் சரவணன் வீடுகளில் ரெய்டு

*  8 மணி நேரம் தொடர் சோதனை
 * பல கோடி ஆவணங்களை லஞ்ச ஒழிப்புத்துறை கைப்பற்றியது

சென்னை: விபச்சார தடுப்பு பிரிவில் பணியாற்றியபோது கோடி கணக்கில் சொத்து சேர்த்த கீழ்ப்பாக்கம் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் சாம் வின்சென்ட் மற்றும் சைதாப்பேட்டை சட்டம் ஒழுங்கு இன்ஸ்பெக்டர் சரவணன் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் நேற்று அதிரடி சோதனை நடத்தினர். கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்தவர் சாம் வின்சென்ட். இவர் தற்போது சென்னை மாநகர காவல் துறையில் கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்தில் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டராக உள்ளார். தற்போது அவர் கீழ்ப்பாக்கம் காவலர் குடியிருப்பில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

அதேபோல், சைதாப்பேட்டை காவல்நிலையத்தில் சட்டம் ஒழுங்கு இன்ஸ்பெக்டராக இருப்பவர் சரவணன். இவர் புழுதிவாக்கம் ஜெயலட்சுமி நகரில் வசித்து வருகிறார். இன்ஸ்பெக்டர்கள் சாம் வின்சென்ட் மற்றும் சரவணன் ஆகியோர் 8.1.2018 மற்றும் 15.5.2018ம் ஆண்டுகளில் விபச்சார தடுப்பு பிரிவில் இன்ஸ்பெக்டர்களாக இருந்தனர். அந்த காலக்கட்டத்தில் இருவரும் சென்னையில் மசாஜ் சென்டர்கள் மற்றும் நட்சத்திர ஓட்டல்களில் புரோக்கர்களிடம் பல லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கி கொண்டு, தடையின்றி பாலியல் தொழில் நடக்க உதவியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இவர்கள் பணி காலத்தில் வெளிநாட்டு அழகிகள் மற்றும் சினிமா நடிகைகள் பலர் பாலியல் வழக்கில் சிக்கியபோது அவர்களை விடுவிக்க பல லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கியதாக, இவர்கள் மீது உளவுத்துறையினர் உயர் அதிகாரிகளுக்கு அறிக்ைக கொடுத்தனர். அதைதொடர்ந்து அப்போது இருவரும் வேறு துறைக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டனர். இந்நிலையில் இன்ஸ்பெக்டர்கள் இருவர் மீதும் துறை ரீதியிலான விசாரணை நடந்து வந்தது. அதில் சென்னையில் நட்சத்திர ஓட்டல்கள் மற்றும் மசாஜ் சென்டர்களில் தடையின்றி பாலியல் தொழில் நடத்த அனுமதி வழங்கி, புரோக்கர்களிடம் பல லட்சம் லஞ்சம் வாங்கியது உறுதியானது. அதைதொடர்ந்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார், இன்ஸ்பெக்டர்கள் சாம் வின்சென்ட் மற்றும் சரவணன் ஆகியோர் மீது 13(2)r\w13(1)(d)pcAct,1988பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.

அதைதொடர்ந்து லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி சங்கர் தலைமையிலான குழுவினர் பாலியல் புரோக்கர்களிடம் பல லட்சம் லஞ்சம் வாங்கிய வழக்கில் லஞ்ச ஒழிப்புத்துறை நடத்திய சோதனையில் இன்ஸ்பெக்டர் சாம் வின்சென்ட் கீழ்ப்பாக்கம் காவலர் குடியிருப்பு மற்றும் கொரட்டூர் வட்டர் கெனால் சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு வீடு மற்றும் புழுதிவாக்கம் ஜெயலட்சுமி நகரில் உள்ள இன்ஸ்பெக்டர் சரவணன் வீட்டில் நேற்று மாலை 6 மணி வரை சோதனை நடந்தது. 8 மணி நேரம் நடந்த இந்த சோதனையில் இன்ஸ்பெக்டர் சாம் வின்சென்ட் வீட்டில் இருந்து பல கோடி மதிப்புள்ள 17 முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

மேலும்,இன்ஸ்பெக்டர் சரவணன் வீட்டில் இருந்து பல கோடி மதிப்புள்ள 8 முக்கிய ஆவணங்கள், பல்வேறு வங்கியில் வைத்துள்ளரூ.18.5 லட்சம் வைப்பு நிதி மற்றும்ரூ.2.50 லட்சம் ரொக்கம் கைப்பற்றப்பட்டது. இந்த அதிரடி சோதனையில் வழக்கு தொடர்பாக முக்கிய ஆவணங்கள் மற்றும் விபச்சார புரோக்கர்களிடம் பல லட்சம் வாங்கிய பணத்திற்கான வங்கி கணக்குகள் அனைத்தும் சிக்கியதாக கூறப்படுகிறது. மேலும், இருவரும் தங்களது வருமானத்திற்கு அதிகமாக விபச்சார தடுப்பு பிரிவில் இருந்து போது சேர்த்த சொத்து ஆவணங்கள் மற்றும் நகைகள் அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டு இருவரிடமும் விசாரணை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. விசாரணையின் போது இருவரும் அளித்த பதிலை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வாக்குமூலமாக பதிவு செய்தனர். பாலியல் புரோக்கர்களிடம் லஞ்சம் வாங்கியதாக இன்ஸ்பெக்டர்கள் 2 பேர் விடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடி சோதனை நடத்தி வரும் சம்பவம் போலீசாரிடையே பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Inspector ,Sam Vincent ,Saravanan ,Saidapet , Inspector Sam Vincent raids homes of Inspector Saravanan in Saidapet
× RELATED வீட்டில் கஞ்சா விற்றவர் கைது