×

அமெரிக்கா, நெதர்லாந்திலிருந்து கடத்திய ரூ.5 லட்சம் மதிப்பு போதைப்பொருள் சிக்கியது

சென்னை: சரக்கு விமானத்தில் பரிசு பொருட்கள் என்ற பெயரில் வந்த பார்சல்களில்ரூ.5 லட்சம் மதிப்புடைய போதைப்பொருட்களை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்தனர். நெதர்லாந்து நாட்டிலிருந்து சென்னையை சேர்ந்த ஒரு முகவரிக்கு ஒரு பார்சல் வந்தது. அதில் கிப்ட் ஆர்ட்டிகல் இருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது. சுங்கத்துறையினர் சந்தேகத்தில் பார்சலை பிரித்துப் பார்த்தனர். அதில் சென்னையை சேர்ந்த ஒருவருக்கு தபால் பார்சல் வந்தது. உயர்ரக போதை மாத்திரைகள் 26 இருந்ததை கண்டுப்பிடித்து பறிமுதல் செய்தனர். மேலும் அந்த சென்னை முகவரி போலியானது என தெரியவந்தது.

இதேபோல், அமெரிக்காவிலிருந்து ஆந்திர மாநிலம் விஜயவாடாவை சேர்ந்த ஒருவருக்கு கூரியர் பார்சல் வந்தது. அதிலும் பிறந்த நாள் பரிசு இருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது. அதில், 24 கிராம் பதப்படுத்தப்பட்ட உயர்ரக கஞ்சா மற்றும் 64 கிராம் கஞ்சா கலந்த ஒரு வகையான போதை பொருள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், அமெரிக்காவிலிருந்து தெலங்கானா மாநிலம்  ஐதராபாத்தை சேர்ந்த ஒருவருக்கு வந்த பார்சலில் 105 கிராம் உயர்ரக கஞ்சா இருந்தது. மூன்று பார்சல்களிலிருந்து, 129 கிராம் கஞ்சா மற்றும் 78 கிராம் கஞ்சா கலந்த போதைப்பொருள் மற்றும் போதை மாத்திரைகளை சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இந்த போதை மாத்திரைகள், பதப்படுத்தப்பட்ட உயர்ரக கஞ்சா, கஞ்சா கலந்த ஒருவகை போதைப்பொருட்களின் இந்திய மதிப்புரூ.1.6 லட்சம் என கூறப்படுகிறது. ஆனால் இதன் சர்வதேச மதிப்புரூ.5 லட்சத்திற்கும் மேல் இருக்கும் என்று தெரிகிறது.

Tags : US ,Netherlands , 5 lakh worth of drugs smuggled from US to Netherlands
× RELATED அமெரிக்காவின் மேரிலேண்ட்...