தற்காலிக பணிநீக்க உத்தரவை எதிர்த்து சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் மனு: தமிழக அரசு பதிலளிக்க மத்திய நிர்வாக தீர்ப்பாயம் உத்தரவு

சென்னை: தற்காலிக பணிநீக்க உத்தரவை எதிர்த்து சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ் மத்திய நிர்வாக தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்தார். ராஜேஷ்தாஸ் மனுவுக்கு தமிழ்நாடு அரசு 4 வாரத்தில் பதில் அளிக்க மத்திய நிர்வாக தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொல்லை அளித்த புகாரில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார் சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ். முன்னாள் டிஜிபி ராஜேஷ்தாஸ் மீதான வழக்கு விழுப்புரம் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. பணியிடத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் தொல்லை தடுப்புச் சட்டப்படி ராஜேஷ்தாஸ் மீது விசாரணை நடைபெற்றது.

கூடுதல் தலைமைச் செயலாளர் ஜெயஸ்ரீ ரகுநந்தன் தலைமையிலான குழு விசாரித்து அறிக்கை அளித்தது. குழு அறிக்கையின் அடிப்படையில் ராஜேசுதாஸுக்கு குற்றக் குறிப்பாணை வழங்கப்பட்டது. தனக்கு எதிரான விசாகா குழு விசாரணை ஒருதலைப்பட்சமானது என தீர்ப்பாயத்தில் ராஜேஷ்தாஸ் முறையீடு செய்தார். பணியிடை நீக்க காலத்துக்கான 50% ஊதியமும் தனக்கு வழங்கப்படவில்லை என்றும் மனுவில் ராஜேஷ்தாஸ் புகார் கூறினார். இந்த வழக்கில் தமிழ்நாடு அரசு 4 வாரத்தில் பதில் அளிக்க மத்திய நிர்வாக தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

Related Stories:

More