×

‘அமேசான்’ மூலம் போதை பொருள் சப்ளை: மத்திய பிரதேசத்தில் 2 பேர் கைது

போபால்: அமேசான் நிறுவனம் மூலம் போதை ெபாருள் சப்ளை செய்த இருவரை மத்திய பிரதேச போலீசார் கைது செய்துள்ளனர். மத்திய பிரதேச மாநிலம் பிந்த் மாவட்டத்தில் இ-காமர்ஸ் விற்பனை நிறுவனமான ‘அமேசான்’ மூலம் போதை பொருட்கள் கடத்தப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதையடுத்து பிந்த் போலீசார் இரண்டு பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். மேலும் அவர்களிடம் இருந்து 20 கிலோ எடை கொண்ட தடை செய்யப்பட்ட போதைப் பொருட்களை ேபாலீசார் பறிமுதல் செய்தனர்.

இதுகுறித்து இ-காமர்ஸ் நிறுவனமான அமேசான் - இந்தியா நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், ‘குற்றம் சாட்டப்பட்ட நபர்கள் எங்களது இ-காமர்ஸ் நிறுவனத்திற்கு பொருட்களை சப்ளை செய்யக் கூடியவர்களாக இருந்தனர். அவர்கள், குறிப்பிட்ட முகவரிக்கு ஆர்டரின் பேரில் போதைப் ெபாருட்களை சப்ளை செய்துள்ளனர். எங்களது நிறுவனத்தை போதைப்பொருள் சப்ளைக்கு பயன்படுத்திய அவர்கள் மீது தனியாக வழக்கு தொடர்வது குறித்து ஆராய்ந்து வருகிறோம்.

இந்த விவகாரம் குறித்து எங்களுக்கு போலீஸ் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டதால், சம்பந்தப்பட்ட நபர்களை போலீசில் ஒப்படைத்துள்ளோம். விசாரணை அமைப்புகளுக்கு தேவையான ஒத்துழைப்பு அளிப்போம்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Amazon ,Madhya Pradesh , Drug supply through 'Amazon': 2 arrested in Madhya Pradesh
× RELATED இந்தியா கூட்டணி வெற்றி பெற்றால் ஒரு...