சேவை மையத்தில் தீ விபத்து: மும்பையில் நேற்றிரவு பரபரப்பு

மும்பை: மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள கஞ்சூர்மார்க் கிழக்கு பகுதியில் ‘சாம்சங்’ நிறுவனத்தின் சேவை மையம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்றிரவு 9 மணியளவில் அந்நிறுவனத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. தகவலறிந்த மீட்பு குழுவினர் ஏழு தீயணைப்பு வாகனங்கள் மற்றும் நான்கு தண்ணீர் டேங்கர் லாரிகளுடன் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். சில மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். தீ விபத்தில் சிக்கியவர்கள் குறித்த விபரங்கள் இன்னும் வெளியாகவில்லை.

இருந்தும், தீ விபத்து எப்படி ஏற்பட்டது என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. இதுகுறித்து போலீஸ் டிசிபி பிரசாந்த் கதம் கூறுகையில், ‘மும்பைக்கு கிழக்கில் உள்ள கஞ்சூர்மார்க்கில் உள்ள சாம்சங் சேவை மையத்தில் தீவிபத்து ஏற்பட்டது. மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்க வாய்ப்புள்ளது. 12 தீயணைப்பு மற்றும் மீட்புவாகனங்கள் மீட்புப் பணிகளை மேற்கொண்டன. இந்த தீவிபத்தில் சிக்கிக்கியவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது’ என்றனர்.

Related Stories:

More