பரங்கிமலை இணை கமிஷனர் அலுவலகத்தில் நடிகர் சூர்யா மீது பாமக புகார்

ஆலந்தூர்: நடிகர் சூர்யா மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பரங்கிமலை போலீஸ் இணை கமிஷனர் அலுவலகத்தில் பாமகவினர் புகார் கொடுத்துள்ளனர். நடிகர் சூர்யா, இயக்குனர் ஞானவேல்  ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பாமக மாநில துணை பொதுச்செயலாளர் வெங்கடேசன் தலைமையில், பசுமைத் தாயகம் மாநில துணை செயலாளர் குரோம்பேட்டை கண்ணன், மாநில துணை செயலாளர்கள் பட்டுபாண்டியன், தட்சிணாமூர்த்தி, முன்னாள் கவுன்சிலர் ஜேஎம்.சேகர் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்டவர்கள் பரங்கிமலையில் உள்ள போலீஸ் இணை கமிஷனர் அலுவலகத்தில் இன்று புகார் கொடுத்தனர்.

அந்த  புகாரில், ‘‘நடிகர் சூர்யா நடித்துள்ள ஜெய்பீம் திரைப்படம் வன்னியர் சமுதாயம், இருளர் சமுதாயம் இடையே கலவரத்தை தூண்டும்விதமாக அமைந்துள்ளது. வன்னியர் சமுதாய தலைவர்களைப் பற்றி அவதூறாக படத்தில் சித்தரிக்கப்பட்டுள்ளது. இதனால் வன்னிய சமுதாயத்தை சேர்ந்த தொழில் புரிவோருக்கு மற்ற சமுதாயத்தில் இடையே இணக்கமாக செயல்பட முடியாத நிலை ஏற்படுகிறது. தொழில் பாதிப்பு ஏற்படுகிறது. எனவே, இந்த படத்தில் நடித்துள்ள நடிகர் சூர்யா, இயக்குனர் ஞானவேல், தயாரிப்பாளர் ஜோதிகா ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Related Stories: