×

திருவள்ளூர், கும்மிடி.யில் மழை பாதித்த 2 ஆயிரம் குடும்பங்களுக்கு நிவாரணம்: உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ வழங்கினார்

திருவள்ளூர்: திருவள்ளூர் மேற்கு மாவட்ட திமுக மற்றும் திருவள்ளூர் தொகுதி திமுக சார்பில், தொடர் மழையால் பாதிக்கப்பட்ட 2 ஆயிரம் குடும்பங்களுக்கு திருவள்ளூரில் வெள்ள நிவாரணம் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு மோட்டார் சைக்கிள், மிதிவண்டிகள் உள்பட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நேற்று நடந்தது. மேற்கு மாவட்ட பொறுப்பாளர் திருத்தணி எம்.பூபதி தலைமை வகித்தார். தலைமை செயற்குழு உறுப்பினர் வி.ஜி.ராஜேந்திரன் எம்எல்ஏ முன்னிலை வகித்தார். நகர செயலாளர் சி.சு.ரவிச்சந்திரன் வரவேற்றார்.

விழாவில் மாநில இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ, 2 ஆயிரம் குடும்பங்களுக்கு தலா 10 கிலோ அரிசி, பாய், போர்வை, மளிகை பொருட்கள், காய்கறிகள் மாற்றுத் திறனாளிகளுக்கு மோட்டார் சைக்கிள்கள், மிதிவண்டிகள் உள்பட நலத்திட்ட உதவிகளை வழங்கினார். விழாவில் பால்வள துறை அமைச்சர் ஆவடி சா.மு.நாசர், எம்எல்ஏக்கள் ஆ.கிருஷ்ணசாமி, டி.ஜெ.கோவிந்தராசன், எஸ்.சந்திரன், திமுக நிர்வாகிகள் கே.திராவிடபக்தன் ஆதிசேஷன், ஒன்றிய செயலாளர்கள் கூளூர் எம்.ராஜேந்திரன், மோ.ரமேஷ், ச.மகாலிங்கம் தா.கிருஷ்டி, கே.அரிகிருஷ்ணன் மற்றும் மாவட்ட பொறுப்பு குழு உறுப்பினர்கள், அனைத்து அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

கும்மிடிப்பூண்டி சுற்றுவட்டார பகுதிகளில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு டி.ஜெ.கோவிந்தராஜன் எம்எல்ஏ தலைமையில் நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது. சிறப்பு அழைப்பாளராக உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ, மழையால் பாதிக்கப்பட்டவர்களின் வீடுகளை நேரில் பார்வையிட்டு ஆறுதல் கூறினார். பின்னர் அரிசி, மளிகை பொருட்கள், பாய், போர்வை உள்ளிட்ட நிவாரண உதவிகள் மற்றும் 3 சக்கர ஸ்கூட்டர்களை வழங்கினார். விழாவில், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் உமா மகேஸ்வரி, முன்னாள் எம்எல்ஏக்கள் சிவாஜி, சேகர், ஒன்றிய குழு துணை தலைவர் மாலதி குணசேகரன், ஒன்றிய செயலாளர்கள் மு.மணிபாலன், மூர்த்தி, ரமேஷ் ராஜ், சந்திரசேகர், சக்திவேல், நிர்வாகிகள் அறிவழகன், பாஸ்கரன், திருமலை, நமச்சிவாயம் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags : Tiruvallur ,Gummidi ,Udayanithi ,Stalin , Relief for 2,000 families affected by rains in Tiruvallur, Gummidi: Udayanithi Stalin MLA
× RELATED திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே...