குமரியில் மண் சரிவு காரணமாக ரயில்களில் பகுதி சேவை ரத்து

சென்னை: குருவாயூர் - சென்னை விரைவு ரயில்(16128) இன்று குருவாயூர் - திருநெல்வேலி இடையே ரத்து செய்யப்பட்டுள்ளது. சென்னை எழும்பூர் - கன்னியாகுமரி விரைவு ரயில் (12633) நாகர்கோவிலுடன் நிறுத்தப்படும் என என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. பெங்களூரு கே.எஸ்.ஆர். - கன்னியாகுமரி சிறப்பு ரயில் (16526) சேவை, கொல்லம் - குமாரி இடையே இன்று ரத்து செய்வதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. மதுரை - புனலூர் சிறப்பு ரயில்(06729) சேவை திருநெல்வேலி - புனலூர் இடையே ரத்து செய்யப்படுகிறது.

Related Stories:

More