×

மாமல்லபுரம் அருகே நிரம்பி வழியும் கடம்பாடி பெரிய ஏரி

மாமல்லபுரம்: மாமல்லபுரத்தில் இருந்து புதுச்சேரி செல்லும் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள கடம்பாடி கிராமத்தில் 150 ஏக்கர் பரப்பளவு கொண்ட பெரிய உள்ளது. இந்த ஏரி தண்ணீர் மூலம் கடம்பாடி சுற்றியுள்ள 250 ஏக்கர் விவசாய நிலங்களில் நெல், நிலக்கடலை, தர்பூசணி போன்றவை பயிரிடப்படுகிறது. ஆண்டுக்கு 2 போகம் விவசாயம் செய்யப்படுகிறது.
அதிமுக ஆட்சியில் ஏரியை தூர்வாரி ஆழப்படுத்தவும், கரைகள் மற்றும் மதகுகளை சீரமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர்.

இந்த நிலையில், மாமல்லபுரம் மற்றும் சுற்று வட்டார கிராமங்களில் காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக கடந்த 10 நாட்களாக காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்தது. இதனால்,  கடம்பாடி ஏரி முழு கொள்ளளவை எட்டியுள்ளது. ஏரி முழுவதும் நிரம்பி உள்ளதால் மதகு வழியாக உபரி தண்ணீர் வெளியேறி வருகிறது. இந்த தண்ணீர் கடம்பாடி - திருக்கழுக்குன்றம்  சாலையை ஆக்கிரமித்துள்ளதால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரிதும்  சிரமப்பட்டு வருகின்றனர். ஏரி நிரம்பி இருப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Tags : Kadambadi ,Mamallapuram , Kadambadi is a large lake that overflows near Mamallapuram
× RELATED மாமல்லபுரம் இசிஆர் சாலையில்...