தாசில்தார் ஆபீசுக்கு பஸ் விடக்கோரி உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏவிடம் மனு

புழல்: மாதவரம் தாசில்தார் அலுவலகத்துக்கு பஸ் இயக்கவேண்டும் என்று உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏவிடம் மனு கொடுத்தனர். திமுக இளைஞரணி செயலாளரும் சென்னை சேப்பாக்கம் -திருவல்லிக்கேணி தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் நேற்று, திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி பெருவாயல் பகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க வருகை வந்தார். பின்னர் அங்கு மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிகளை வழங்கினார்.

முன்னதாக புழல் அம்பேத்கர் சிலை அருகில் திமுக பொதுக்குழு உறுப்பினர் புழல் எம்.நாராயணன் தலைமையில் ஏராளமானோர் நாதஸ்வரம், மேள தாளம், பேண்ட் வாத்தியம் முழங்க சிறப்பான வரவேற்பு கொடுத்தனர். அப்போது புழல் பாலாஜி நகரில் உள்ள மாதவரம் தாசில்தார் அலுவலகத்துக்கு பஸ் இயக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று உதயநிதி எம்எல்ஏவிடம் கோரிக்கை மனு கொடுத்தனர். ‘’அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று உதயநிதி ஸ்டாலின் கூறினார்.

Related Stories:

More