×

இலங்கை கடற்படையால் சுட்டுக் கொல்லப்பட்டாரா?: மீனவர் ராஜ்கிரண் உடலை மறு பிரேத பரிசோதனை செய்ய ஐகோர்ட் கிளை உத்தரவு..!!

மதுரை: இலங்கை கடற்படையால் சுட்டுக்கொல்லப்பட்ட மீனவர் ராஜ்கிரண் உடலை மறு பிரேத பரிசோதனை செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைபட்டினத்தை சேர்ந்த மீனவர் ராஜ்கிரண் என்பவரது மனைவி பிருந்தா, உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார். அதில், இலங்கை கடற்படையின் ரோந்து கப்பல் இடித்ததால் தன் கணவர் நடுக்கடலில் மூழ்கி உயிரிழந்ததாக சொல்லப்படுவதாகவும் ஆனால் இந்த மரணத்தில் தனக்கு சந்தேகம் இருப்பதால் உடலை மறு பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுவை விசாரித்த நீதிபதி, இறந்த மீனவர் உடலை மறு பிரேத பரிசோதனை செய்வதில் என்ன தயக்கம் என்று கேள்வி எழுப்பினார். மீனவர் சுடப்பட்டு இறந்திருந்தால் அது பெரும் குற்றம் என தெரிவித்த நீதிபதி, ராஜ்கிரண் சுடப்பட்டு இறந்தாரா? அல்லது நீரில் மூழ்கி இறந்தாரா? என்பது தெளிவுபடுத்தப்பட வேண்டும் என உத்தரவிட்டார். மேலும் மீனவர் ராஜ்கிரண் இலங்கை கடற்படையால் சுட்டுக்கொல்லப்பட்டிருந்தால் அதனை எளிதாக விட்டுவிட முடியாது எனவும் நீதிபதி குறிப்பிட்டார்.


Tags : Sri Lanka Navy ,Icourt Branch ,Rajqiran , Sri Lanka Navy, Fisherman Rajkiran, Autopsy
× RELATED எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தமிழக...