×

கன்னியாகுமரியில் தண்ணீர் தேங்கியுள்ள 42 பள்ளிகளுக்கு விடுமுறை: தண்ணீர் வடிந்த பகுதிகளிலுள்ள பள்ளிகள் திறப்பு

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடர்மழையால் தண்ணீர் தேங்கியுள்ள மற்றும் நிவாரண முகாம்களாக மாற்றப்பட்டுள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடர்ந்து 5 நாட்களாக கனமழை பெய்து வந்தது. இதனால் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டிருந்தன. தண்ணீர் தேங்கியுள்ளதால் 42 பள்ளிகளுக்கும், நிவாரண முகாம்களாக மாற்றப்பட்டுள்ள பள்ளிகள் என மொத்தம் 93 அரசு பள்ளிகளுக்கு மாவட்ட ஆட்சியர் அரவிந்த் விடுமுறை அளித்துள்ளார். மாவட்டத்தில் மீதமுள்ள அரசு பள்ளிகள் இன்று முதல் துவங்கியுள்ளது. 4 நாட்கள் கனமழைக்கு பிறகு இன்று குமரி மாவட்டத்தில் இயல்பு நிலை திரும்பியுள்ளது. மாணவர்கள் ஆர்வத்துடன் பள்ளிக்கு வந்துள்ளனர்.

மாணவ - மாணவிகள் முகக்கவசம் அனைத்து கொரோனா விதிமுறைகளை பின்பற்றி ஆர்வத்துடன் பள்ளிக்கு வந்துள்ளனர். வெள்ளம் சூழ்ந்துள்ள பகுதிகளில் உள்ள குழந்தைகள் மட்டும் பள்ளிக்கு வர முடியாத சூழல் உள்ளது. அவர்களும் ஓரிரு நாட்களில் பள்ளிக்கு வந்துவிடுவர் என்று ஆசிரியர் ஒருவர் தெரிவித்துள்ளார். சாலைகள் துண்டிப்பு அல்லது வீடுகளில் வெள்ளம் சூழ்ந்துள்ள பகுதிகளில் உள்ள மாணாக்கர்கள் தான் பள்ளிக்கு வர முடியாத சூழல் உள்ளது. குறிப்பாக கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒருசில பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது. அதனை அப்புறப்படுத்தும் பணியில் மாவட்ட நிர்வாகத்தினர் ஈடுபட்டுள்ளனர்.

Tags : Kanyakumari , Kanyakumari, Schools, Opening
× RELATED கன்னியாகுமரி மாவட்டத்தில் விசைப்படகு...