எளிய மக்களின் குரலாய் நின்றால் எதிரிகள் அலறுவார்களென்பதே உலக நியதி….நடிகர் சூர்யாவிற்கு மதுரை எம்.பி. வெங்கடேசன் ஆதரவு!!

சென்னை : சூர்யாவின் தயாரிப்பு மற்றும் நடிப்பில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் வெளியாகிய திரைப்படம் ஜெய்பீம். அமேசான் ஓடிடி தளத்தில் வெளியான இந்தப் படத்துக்கு மிகப் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. அதேநேரத்தில் இந்தப் படத்துக்கு எதிர்ப்புகளும் எழுந்துள்ளது. ஜெய் பீம் திரைப்படத்தில் உள்ள காட்சி ஒன்றில் காலண்டரில் உள்ள புகைப்படம் குறிப்பிட்ட சமூகத்தினரை இழிவுபடுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதனையடுத்து அந்த புகைப்படம் நீக்கப்பட்டது. இருப்பினும் நடிகர் சூர்யாவுக்கு எதிர்ப்புகள் வலுத்து வருகிறது. இந்த நிலையில் அவரது ரசிகர்கள் சூர்யாவிற்கு ஆதரவாக ட்விட்டரில் #WestandWithSuriya என்ற ஹேஷ்டேக்கை ட்ரெண்ட் செய்து வருகின்றனர். இந்த நிலையில் மதுரை எம்.பி. வெங்கடேசன் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், எளிய மக்களின் குரலாய் நின்றால்  எதிரிகள் அலறுவார்களென்பதே உலக நியதி உம்மோடு நாங்கள் இருக்கிறோம்… என்று பதிவிட்டுள்ளார்.

Related Stories:

More