தமிழக அரசின் மலிவு விலை சிமெண்ட் 'வலிமை'யை அறிமுகப்படுத்தினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!!

சென்னை : தமிழக அரசின் மலிவு விலை சிமெண்ட் வலிமையை முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிமுகப்படுத்தினார். சென்னை தலைமைச் செயலகத்தில் வலிமை சிமெண்டை முதல்வர் ஸ்டாலின் அறிமுகம் செய்து வைத்தார். தமிழகத்தில் சிமெண்ட் விலை உச்சத்தில் இருந்து வருகிறது. இதனால் தமிழக அரசு சார்பில் சிமெண்ட் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்ய வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது.

இதையடுத்து வலிமை என்ற வணிகப் பெயருடன் குறைந்த விலையில் சிமெண்ட் வெளி சந்தையில் அறிமுகப்படுத்தப்படும் என தமிழக சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டிருந்தது.

இதன்படி தமிழக அரசின் டான்சென் நிறுவனம் சார்பில் குறைந்த விலையில் தயாரிக்கப்பட்டுள்ள வலிமை சிமெண்ட்டை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று அறிமுகம் செய்து வைத்தார். வலியதோர் உலகம் செய்வோம் எனும் கருத்தை மையமாக கொண்டு , குறைந்த விலையிலும், நிறைந்த தரத்திலும் இந்த சிமெண்ட் உருவாகி உள்ளது. இதன்  மூலம் வெளி சந்தையில் சிமெண்ட் விலை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ்நாடு சிமெண்ட் கழகம் சார்பாக விற்பனை செய்யப்படும் சிமெண்ட் விலை மூட்டை ஒன்றுக்கு 360 ரூபாயாக உள்ளது. இது தனியார் சிமெண்ட்டை விட 90 ரூபாய் குறைவாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories:

More