நான் சட்டத்தை மீறிவிட்டதாக பரவும் தகவல்கள் பொய்...என்னிடம் ரூ.1.5 கோடி மதிப்பில் ஒரு கைக்கடிகாரம் மட்டுமே இருந்தது: ஹர்திக் பாண்டியா விளக்கம்!!

மும்பை :  துபாயில் இருந்து திரும்பிய இந்திய கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியாவிடம் இருந்து 5 கோடி ரூபாய் மதிப்பிலான 2 கை கடிகாரங்கள் பறிமுதல் செய்யபட்டதாக தகவல் வெளியானது.. டி 20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்ற இந்திய அணியினர் இந்தியாவில் இருந்து கடந்த 14ம் தேதி தாயகம் திரும்பினர். துபாயில் இருந்து திரும்பியபோது மும்பை விமான நிலையத்தில் ஹர்திக் பாண்டியாவிடம் இந்த கைக்கடிகாரங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகத் தகவல்கள் வெளியானது.

இந்நிலையில், இதனை மறுத்துள்ள ஹர்திக் பாண்டியா விளக்க அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்., அந்த அறிக்கையில், ”ரூ.1.5 கோடி மதிப்பிலான ஒரே ஒரு கைக்கடிகாரம் மட்டுமே என்னிடம் இருந்தது. மும்பை விமான நிலையத்தில் நானே முன்வந்து சுங்கத் துறை அதிகரிகளிடம் கைக்கடிகாரம் கொண்டு வந்திருக்கும் தகவலைத் தெரிவித்தேன். ஆனால், சமூக ஊடகங்களில் நான் கைக்கடிகாரத்தை மறைத்துக் கொண்டு வந்ததுபோல் தகவல் வெளியாகியிருக்கிறது.

நான் கடிகாரத்தைப் பற்றி சொன்னவுடன் அவர்கள் என்னிடம் அதற்கான ஆவணங்களைக் கேட்டனர். நான் ஆவணங்களைக் கொடுத்துள்ளேன். அவர்கள், அதற்கான சுங்க வரி மதிப்பீட்டைச் செய்து வருகின்றனர். அவர்கள் மதிப்பிட்டு தொகையைச் சொன்னவுடன் நான் வரியைச் செலுத்தப் போகிறேன்.நான் சட்டத்தை மீறிவிட்டதாக பரவும் தகவல்கள் பொய். அதேபோல், நான் கொண்டுவந்த கைக்கடிகாரத்தின் மதிப்பு ரூ.5 கோடி என்பதும் தவறானது” என்று தெரிவித்துள்ளார்.

Related Stories:

More