×

சபரிமலையில் சிம்ஸ் மருத்துவமனை சார்பில் இலவச ஆம்புலன்ஸ் சேவை: அமைச்சர் சேகர்பாபு தொடங்கிவைப்பு

சென்னை: சபரிமலையில் பக்தர்களின் வசதிக்காக சிம்ஸ் மருத்துவமனை சார்பில் இலவச ஆம்புலன்ஸ் சேவை தொடங்கப்பட்டுள்ளது. சிம்ஸ் மருத்துவமனையின் இலவச ஆம்புலன்ஸ் சேவையை சென்னையில் அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார். சபரிமலை அடிவாரத்திற்கு செல்லும் ஆம்புலன்ஸ் 2 மாதத்திற்கு அங்கு வரும் பக்தர்களுக்கு சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சபரிமலையில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ஹெல்ப் லைன் தொடங்கப்படவுள்ளதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

சபரிமலையில் உள்ள பக்தர்களுக்கு ஏதேனும் உதவிகள் தேவைப்பட்டால் உடனடியாக உதவும் வகையில் கேரளா அரசுடன் பேசி அங்கும் ஒரு உதவி மையத்தை அமைக்க தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார். அதற்குண்டான பணிகள் துறைசார்ந்த ஆணையாளர் தலைமையில் நடைபெற்று வருகிறது. இன்னும் ஓரிரு நாளில் அந்த உத்தரவு வந்தவுடன் முதல்வர் அதற்குண்டான அறிவிப்பை வெளியிட உள்ளார். தமிழகத்தில் இருந்து செல்லும் லட்சக்கணக்கான பக்தர்களுக்கு உதவும் வகையில் பக்தர்களுக்கு உதவும் பணியை இறைப்பணியாக கருதி தமிழக அரசு அதற்குண்டான ஏற்பாடுகளை செய்ய உள்ளது. அதன் முயற்சியாக இன்று சிம்ஸ் மருத்துவமனையின் சார்பில் அனுப்பப்பட்டுள்ள இந்த மருத்துவ அவரச தேவை ஊர்தியை வழங்கியுள்ள நிர்வாகத்திற்கு அமைச்சர் வாழ்த்து தெரிவித்தார்.

தமிழக அரசு சார்பில் கொரோனா நோய்க்கான தடுப்பூசிகள் பெரும்பான்மையான அளவிற்கு செலுத்தப்படும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அனைவரும் 2 தவணை தடுப்பூசி செலுத்திக்கொள்ளுமாறு அமைச்சர் சேகர்பாபு வலியுறுத்தியுள்ளார்.

Tags : Sims Hospital ,Sabirimalayam ,Minister ,Sebabu , Sabarimala
× RELATED பாஜவுக்கு முகவர்கள் இருந்தால்தானே...