மீண்டும் எகிறும் நகை விலை!: சென்னையில் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.112 உயர்ந்து ரூ.37,200க்கு விற்பனை..!!

சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.112 அதிகரித்துள்ளது. அனைத்து காலகட்டத்துக்குமான பாதுகாப்பான முதலீடாக தங்கம் பார்க்கப்படுவதால் பலரும் தங்கத்தில் முதலீடு செய்கின்றனர். இதனால் தேவை அதிகரித்துள்ளதால் தங்கத்தின் விலை தொடர்ந்து ஏறு முகமாகவே உள்ளது. தங்கம் பெண்களுக்கு மிகவும் பிடித்தமான ஒன்று, தென்இந்தியாவில் அதிகளவிலான தங்கத்தை வைத்துள்ள மாநிலத்தில் தமிழ்நாடு முன்னிலையில் உள்ளது. மேலும் தமிழ்நாட்டு பெண்களின் தங்க நகைகள் மீதான மோகம் மிகவும் அதிகம், தமிழ்நாட்டில் சென்னை போன்ற முக்கிய நகரங்களில் தங்கத்தின் வர்த்தகம் மிகவும் அதிகம்.  

இந்நிலையில் சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 12 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.4,650க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல் சவரன் விலை ரூபாய் 112 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.37,200க்கும் விற்பனை ஆகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி ரூ.71.50க்கும் விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ விலை ரூபாய் 71,500 எனவும் விற்பனையாகி வருகிறது. தொடர்ந்து, சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூ.5,014 எனவும் ஒரு சவரன் ரூ.40,112 எனவும் விற்பனையாகி வருகிறது.

Related Stories:

More