குன்னூர் சிம்ஸ் பூங்காவில் நுழைந்த கரடி சர்க்கரை டப்பாவுடன் ஓட்டம்

குன்னூர்: நீலகிரி மாவட்டம்  குன்னூர் மற்றும் அதன் சுற்றுவட்டார வனப்பகுதிகளில் இருந்து கரடிகள் வெளியேறி தேன் மற்றும் எண்ணெய் தேடி குடியிருப்பு பகுதிகளுக்குள் உலா வருகின்றன. இந்த நிலையில் குன்னூர் சிம்ஸ் பூங்காவிற்குள் நேற்று நள்ளிரவில் கரடி ஒன்று புகுந்தது. பூங்காவிற்குள் உலா வந்த கரடி அரசு தோட்டக்கலை துறைக்கு சொந்தமான தங்கும் விடுதியின் கதவை உடைத்து உள்ளே நுழைந்தது. சமையல் அறையில் இருந்த சர்க்கரையை ருசித்து தின்றது. பின்னர் மீதி இருந்த  சர்க்கரையை டப்பாவோடு தூக்கி சென்றது. இது குறித்து பூங்கா ஊழியர்கள் வனத்துறையினருக்கு தகவல்  தெரிவித்தனர். வனத்துறையினரின் கரடி நடமாட்டம் குறித்து கண்காணித்து வருகின்றனர்.

Related Stories:

More