×

பாக்-ஆப்கான் இடையே அடுத்த ஆண்டில் இருந்து நண்பேன்டா பஸ் சர்வீஸ்

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் இடையே கடந்த 5 ஆண்டுக்கு முன் நிறுத்தப்பட்ட பஸ் சேவையை அடுத்த ஆண்டு முதல் மீண்டும் தொடங்க இரு நாடுகளும் ஒப்புக் கொண்டுள்ளன. அண்டை நாடுகளான பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் இடையேயான நட்பை அடையாளப்படுத்தும் வகையில் ‘தோஸ்தி’ எனும் பெயரில் பஸ் சேவை நடந்து வந்தது. இந்த பஸ் சேவை கடந்த 2016ம் ஆண்டுடன் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இந்நிலையில், ஆப்கானிஸ்தானில் தலிபான் ஆட்சி அமைந்த பிறகு மீண்டும் அந்நாடு, பாகிஸ்தானுடன் நட்பை புதுப்பித்து வருகிறது.

சமீபத்தில் ஆப்கானின் வெளியுறவு அமைச்சர் அமிர் கான் முட்டாகி தலைமையிலான குழு பாகிஸ்தான் சென்றது. அப்போது, பஸ் சேவையை மீண்டும் தொடங்க வேண்டுமென ஆப்கான் தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. இதற்கு பாகிஸ்தானும் சம்மதித்துள்ளது. இரு நாடுகளின் பாதுகாப்பு துறை ஒப்புதல் கிடைத்ததும் அடுத்த ஆண்டு முதல் ‘நண்பேன்டா’ பஸ் சேவையை தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த பஸ் பாகிஸ்தானின் கைபர் பக்துன்வா மாகாணத்தின் பெஷாவர் நகரில் இருந்து ஆப்கானிஸ்தானின் ஜலாலாபாத் வரை இயக்கப்படும். இந்த சேவை இரு நாட்டு மக்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும் என பாகிஸ்தான் அரசு வரவேற்றுள்ளது.

Tags : Nanpanta ,Bagh-Afghan , Nanpanta bus service from next year between Bagh-Afghan
× RELATED பர்கினோ பாசோவில் அரசுக்கு எதிராக...