×

அரையிறுதியில் முகுருசா: டபுள்யுடிஏ மகளிர் பைனல்ஸ்

குவாதலஜாரா: டபுள்யுடிஏ பைனல்ஸ் மகளிர் டென்னிஸ் தொடரின் அரையிறுதியில் விளையாட, ஸ்பெயின் வீராங்கனை கார்பினி முகுருசா தகுதி பெற்றார். டியோடிஹுவகான் பிரிவில் இடம் பெற்றுள்ள முகுருசா தனது கடைசி ரவுண்ட் ராபின் லீக் ஆட்டத்தில் எஸ்டோனியாவின் அனெட் கோன்டவெய்ட்டுடன் மோதினார். அபாரமாக விளையாடி கோன்டவெய்ட்டின் சர்வீஸ் ஆட்டத்தை முறியடித்த முகுருசா 6-4, 6-4 என்ற நேர் செட்களில் வெற்றியை வசப்படுத்தினார். இப்போட்டி 1 மணி, 27 நிமிடத்தில் முடிவுக்கு வந்தது.

இந்த பிரிவில் செக் குடியரசின் பார்போரா கிரெஜ்சிகோவாவுக்கு எதிராக வெற்றி பெற்றிருந்த முகுருசா, மற்றொரு செக். வீராங்கனை கரோலினா பிளிஸ்கோவாவிடம் தோல்வியை தழுவினார். எனினும், கோன்டவெய்ட்டுக்கு எதிராக பெற்ற வெற்றியால் அவர் அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்தார். மற்றொரு லீக் ஆட்டத்தில் கரோலினா பிளிஸ்கோவா 0-6, 6-4, 6-4 என்ற செட் கணக்கில் கிரெஜ்சிகோவாவை வீழ்த்தினார். முதல் 2 இடங்களைப் பிடித்த கோன்டவெய்ட், முகுருசா அரையிறுதிக்கு முன்னேறிய நிலையில், 3வது இடம் பிடித்த பிளிஸ்கோவா ஏமாற்றத்துடன் வெளியேறினார்.


Tags : Muguruza ,WTA Women's Finals , Muguruza in the semifinals: WTA Women's Finals
× RELATED அரையிறுதியில் முகுருசா: டபுள்யுடிஏ மகளிர் பைனல்ஸ்